» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடியில் ரூ.94.54 இலட்சம் செலவில் சாலைப் பணி: அமைச்சர் பி.கீதாஜீவன் தொடங்கி வைத்தார்

வெள்ளி 11, ஏப்ரல் 2025 12:29:10 PM (IST)



தூத்துக்குடி ஜெயராஜ் சாலைப் பகுதியில் ரூ.94.54 இலட்சம் செலவில் பயனுறு சாலை அமைக்கும் பணியினை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜெயராஜ் சாலைப் பகுதியில் இன்று(11.04.2025), மதுரை-தூத்துக்குடி சாலை கி.மீ132/6ல் தூத்துக்குடியில் சாலை மேம்பாலம் கட்டும் பணியில் தூத்துக்குடி பக்கம் மற்றும் ஜெயராஜ் சாலைப் பகுதியில் பயனுறு சாலை அமைக்கும் பணியினை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

மீளவிட்டான் தூத்துக்குடி இரயில் நிலையங்களுக்கு இடையே இரயில்வே கி.மீ 651/12-13 இருப்புப்பாதை கடவு எண்.485க்கு பதிலாக, மதுரை- தூத்துக்குடி சாலை கி.மீ132/6ல் தூத்துக்குடியில் சாலை மேம்பாலம் கட்டும் பணியில் தூத்துக்குடி பக்கம் மற்றும் ஜெயராஜ் சாலை பகுதியில் பயனுறு சாலை அமைக்கப்படவுள்ளது.

மேலும், மேம்பாலம் கட்டுமானப் பணியானது ரூ.20.27 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளது. தற்போது, தூத்துக்குடி பக்கம் மற்றும் ஜெயராஜ் சாலைப் பகுதியில் 400 மீட்டர் நீளத்திற்கு ரூ.94.54 இலட்சம் செலவில் பயனுறு சாலை அமைப்பதற்கான பணிகளை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதாஜீவன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி கோட்டப்பொறியாளர் (திட்டங்கள்) லிங்கசாமி, தூத்துக்குடி உதவி கோட்டப்பொறியாளர் (திட்டங்கள்) உமாதேவி, இளநிலைப் பொறியாளர் அம்ஜெத்கான் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

ஏ ராஜவேல் 69c/1 டுவிபுரம் இரண்டாம் தெரு தூத்துக்குடி 3Apr 11, 2025 - 12:54:28 PM | Posted IP 162.1*****

பழைய பேருந்து SAV பள்ளி மைதானத்தின் தென்பரத்தில் போடப்படும் சாலையினால் விபத்துக்களையை நேரிடும் மேலும் இந்த சாலையினால் பழைய பேருந்து ரோட்டில் இணைக்கப்படுவதால் பசஸ்கள் போக்குவரத்து வரும்போது இன் சாலையில் இருந்து செல்லும் வாகனங்கள் டிராபிக் ஜாமாகும் இதுபோன்ற ஜெயராஜ் ரோட்டில் இருந்து தற்போது போடப்படும் புதிய சாலையின் வழியாக அங்கிருந்து வாகனங்கள் செல்லவோ இல்லை வரும் பொழுதும் டிராபிக் ஜாமாகும் இந்த சாலையை தவிர்த்துபழைய பேருந்தில் இருந்து பஸ்கள் வெளிவரும் சாலைமீனாட்சிபுரம் மெயின் ரோடு அதாவது நந்தகுமார் ஆஸ்பத்திரியின் பக்கம் உள்ள அந்த சாலையைஅகலத்தை அதிகப்படுத்தினாலேபழைய பேருந்தில் இருந்து வெளியேறும் பஸ்களும் மற்றும் மதுரையில் இருந்து வரும் பஸ்களும்மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இருக்கும் மக்கள் பயன்பாட்டிற்கும்அமையும் இதனை மறுபரிசீலனை செய்துதற்போது மாநகராட்சியின் சுவரை ஒட்டி வடபக்கமும்SAV மைதானத்தின் பின்புறம் போடும் சாலையை புதிய பழைய பேருந்து பஸ் வெளியே வரும் பாதையை அகலப்படுத்த செய்தால் நல்லது மாநகராட்சி ஆணையர் அவர்களுக்கும் MLA மற்றும் மேயர் அவர்களுக்கும் அவர்களுக்கும் இக் கோரிக்கையை பணிவுடன் சமர்ப்பிக்கிறேன் ஏ ராஜவேல் 69c/1 டுவிபுரம் இரண்டாம் தெரு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory