» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வணக்கம் நெல்லை தொலைபேசி எண் அறிமுகம்: பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்!

செவ்வாய் 1, ஏப்ரல் 2025 3:10:48 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமக்கள் அடிப்படை வசதிகள், இதர சேவைகள் மற்றும் அவசரகால உதவிகள் குறித்து "வணக்கம் நெல்லை" தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார். 

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது மக்களின் அடிப்படை வசதிகள், இதர சேவைகள் மற்றும் அவசரகால உதவிகள் குறித்து பொதுமக்கள் தங்களது புகார் மற்றும் கோரிக்கைகளைத் தொலைபேசி அழைப்பின் மூலமாகவோ (அல்லது) கட்செவி செயலி (Whats app) மூலம் செய்தியாகவோ தெரிவிக்க ஏதுவாக ”வணக்கம் நெல்லை” எனும் தொலைபேசி 9786566111 எண் செயல்படுத்தப்பட்டுள்ளது.

”வணக்கம் நெல்லை” தொலைபேசி எண். 9786566111 ல் ஜனவரி 2025 முதல் தற்போது வரை 167 கோரிக்கைகள் பெறப்பட்டு, அவற்றில் 111 கோரிக்கைகள் தீர்வு செய்யப்பட்டுள்ளது. 

மேலும், பொதுமக்கள், தொலைபேசி எண். 9786566111 ஐ - 24 மணி நேரமும் பயன்படுத்தி அடிப்படை வசதிகள் மற்றும் இதர வசதிகள் சேவை குறைபாடுகளை தொலைபேசி அழைப்பின் மூலமாகவோ (அல்லது) கட்செவி செயலி (Whats app) மூலம் செய்தியாகவோ தெரிவித்து தீர்வு பெற்றிடலாம் என மாவட்ட ஆட்சியர் மரு.இரா.சுகுமார் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து

adv BabuApr 1, 2025 - 09:48:04 PM | Posted IP 162.1*****

ithuku munnad collector ku anupuna oru mailskum reply varala ithula ithu veraya

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory