» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு : ஏப்.1 முதல் 4வரை நேர்முகத் தேர்வு
ஞாயிறு 30, மார்ச் 2025 9:05:55 PM (IST)
தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின்சார கார் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வியட்நாமைச் சேர்ந்த உலகின் முன்னணி மின் வாகன தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலை தொடங்குகிறது. இங்கு ட்ரைனி பிரஷ்ஷர்ஸ் பணியிடங்களுக்கு மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் பிரிவுகளில் 2021, 2022, 2023 & 2024 ஆம் ஆண்டுகளில் ஹரியர் இல்லாமல் தேர்ச்சி பெற்ற ஆண், பெண் இருபாலர்க்கும் வேலை வாய்ப்பு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது .
கல்வித் தகுதி டிப்ளோமா மெக்கானிக்கல் & ஆட்டோமொபைல். வயது : 18 முதல் 25 வரை. சம்பளம் ரூ.20,000 மற்றும் பிற சலுகைகள். நேர்காணல் நடக்கும் இடம் "வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியா பிரைவேட் லிமிடெட், பிளாட் நம்பர் B - 1 / 11., சிப்காட் தொழில் பூங்கா, ஓட்டப்பிடாரம், சில்லாநத்தம், தூத்துக்குடி. நேர்காணல் நடக்கும் நாள் நேரம் : ஏப்.1 முதல் 4வரை காலை 8:30 மணி முதல் நடைபெறும். மேலும் 9962362244 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
மக்கள் கருத்து
PonrajuMar 31, 2025 - 12:12:43 PM | Posted IP 104.2*****
This is fake news as per Vin fast Project head statement.
வேலை இல்லாத அப்பாவிMar 30, 2025 - 10:03:41 PM | Posted IP 162.1*****
முதலை அமைச்சர் கூறுவது வின் பாஸ்ட் தொழிற்சாலைகளால் அனைவர்க்கும் வேலை கிடைக்குமாம் நம்பினோம், ஆனால் விளம்பரத்துல 2021, 2022, 2023 & 2024 இல் தேர்ச்சி பெற்றவங்களுக்கும் மட்டும் வேலை வாய்ப்பாம்.
மேலும் தொடரும் செய்திகள்

சொட்டு நீர் பாசனத்திற்கு 100 சதவீதம் மானியம் : விவசாயிகள் பயன்பெற ஆட்சியர் அழைப்பு!
செவ்வாய் 19, மே 2026 3:53:35 PM (IST)

நாகர்கோவிலில் மே 22ல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: இளைஞர்களுக்கு அழைப்பு !
செவ்வாய் 19, மே 2026 3:41:34 PM (IST)

குருவாயூர் எக்ஸ்பிரஸில் நகை வியாபாரியிடம் 1½ கிலோ தங்க நகைகள் கொள்ளை!
ஞாயிறு 17, மே 2026 11:33:58 AM (IST)

நாகர்கோவில் அருகே நகைக்கடையில் கொள்ளையடித்த 2 பேர் கைது: மேலும் மூவருக்கு போலீஸ் வலைவீச்சு
சனி 16, மே 2026 9:02:22 PM (IST)

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - ஓட்டுநர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்!
சனி 16, மே 2026 4:27:27 PM (IST)

கன்னியாகுமரியில் 'கொங்கு நாடு உணவுத் திருவிழா தொடக்கம்: சுற்றுலாப் பயணிகளுக்கு வரவேற்பு!
வெள்ளி 15, மே 2026 5:47:11 PM (IST)



GunaselviAug 18, 2025 - 02:47:16 AM | Posted IP 162.1*****