» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கத்திரிக்கோலால் குத்தி பெண் கொடூர கொலை: வாலிபர் கைது - தூத்துக்குடி அருகே பயங்கரம்!
ஞாயிறு 30, மார்ச் 2025 7:42:33 PM (IST)
தூத்துக்குடி அருகே பெண்ணை கத்திரிக்கோலால் குத்தி கொடூரமாக கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் முத்தையா மனைவி பார்வதி (50), இவர் கணவர், குழந்தைகளை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவர் அடிக்கடி அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் செல்வம் என்பவர் வீட்டுக்கு அடிக்கடி செல்வாராம். இதை அவரது மகன் புஷ்பராஜ் (18) என்பவர் கண்டித்து உள்ளார்.
இன்று மாலை 5 மணி அளவில் பார்வதி மீண்டும் அவரதுவீட்டுக்கு சென்று உள்ளார். இதனால் புஷ்பராஜ் அவரை கண்டித்துள்ளார். இதனால் பார்வதி அவரிடம் வாக்குவாதம் செய்தாராம். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த புஷ்பராஜ், பார்வதியை கத்திரிக்கோலால் கழுத்தில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் பார்வதி அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முருகன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வதி சடலத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து புஷ்பராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சொத்து மதிப்பு சான்று வழங்க ரூ.3ஆயிரம் லஞ்சம் : கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் கைது!
புதன் 2, ஏப்ரல் 2025 4:46:47 PM (IST)

குமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
புதன் 2, ஏப்ரல் 2025 3:19:25 PM (IST)

கூட்டுறவு பண்டகச்சாலை குடோனில் ஆட்சியர் திடீர் ஆய்வு
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 3:26:14 PM (IST)

தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு: மத்திய அரசு அறிவிப்பு!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 12:52:35 PM (IST)

பத்துகாணி மலைவாழ் மக்களின் வசதிக்காக இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 12:18:42 PM (IST)

கேரள முதல்வர் பினராயி விஜயன் குமரி வருகை : ஆட்சியர் ஆர்.அழகுமீனா வரவேற்பு
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 12:07:52 PM (IST)

nishaApr 1, 2025 - 01:19:52 PM | Posted IP 162.1*****