» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அதிமுக ஆட்சியில் 45 நாட்கள் மழைநீர் தேங்கி மக்கள் அவதி: மேயர் ஜெகன் பொியசாமி பேச்சு!

புதன் 12, மார்ச் 2025 3:23:05 PM (IST)



"தூத்துக்குடியில், கடந்த அதிமுக ஆட்சியில் 45 நாட்கள் மழைநீரில் பொதுமக்கள் சிரமபட்டனர். ஆனால், திமுக ஆட்சியில் அந்த நிலை இல்லை" என மேயர் ஜெகன் பொியசாமி தெரிவித்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேயர் பேசுகையில் "கடந்த ஆண்டு ஜீலை மாதம் 28-ம் தேதி முதல் பொதுமக்களின் குறைதீர்க்கும் முகாம் 4 மண்டலங்களிலும் சுழற்சி முறையில் நடைபெறுகிறது. இந்த மண்டலத்திற்குட்பட்ட 15 வார்டுகளையும் சேர்ந்த மக்கள் பயனடைகின்றனர். 

குறிப்பாக பிறப்பு சான்றிதழ், முகவரி மாற்றம் பெயா் மாற்றம், குடிநீர் இணைப்பு, பாதாளசாக்கடை, போன்றவைகள் உடனடியாக அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கஷ்டபடக்கூடாது என்பதற்காக கிராமபுறத்தையும் தாண்டி நகர்புறத்திலும் தமிழக முதலமைச்சர் இந்த முகாமை தொடங்கியுள்ளர். 

கடந்த 3 ஆண்டுகாலமாக தூத்துக்குடி மாவட்டத்தில் எல்லா பள்ளி செல்லும் சாலை, மற்ற சாலைகள், பொதுமக்கள் செல்லும் சின்ன சின்ன சந்துகள், மேற்கு பகுதியில் மழைநீர்தேங்கும் பிரச்சனை, மழைநீர் தேங்கும் சாலைகள், தெருவிளக்கு வசதிகள், மற்றும் 60 வாா்டுபகுதியில் உள்ள சாலை வசதி 80 சதவீதம் முடிவடைந்துள்ளது. விடுபட்ட பகுதியிலும் சாிசெய்து விரைவில் கொடுப்போம், கடந்த காலத்தில் மழை நீர் தேங்கிய பகுதியில் இப்போது மழைநீர் தேங்காத வண்ணம் சாிசெய்யப்பட்டுள்ளது. 

நேற்று பெய்த மழையிலும் மழை நீர் நிறைய இடங்களில் தேங்கவில்லை. அதற்கு தகுந்தாற்போல் வேலைகள் நடைபெற்றுள்ளன. மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவித்தப்படி தற்போது மகளிர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. 14வது வாா்டு குறுங்காடு பகுதியில் பூங்கா விரைவில் அமைத்து கொடுக்கப்படும். மேற்கு மண்டலத்தில் நிறைய காலி இடம் உள்ளன. ஓரு சிறிய குழந்தை தவறி விழுந்தது. அதிமுக ஆட்சியில் 2020 பெய்த மழையில் 45 நாட்கள் தண்ணீரில் இருந்திா்கள், தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் வடிகால் வசதி செய்து கொடுத்துள்ளோம். 

2022ல் 3 நாட்கள் தண்ணீர் கிடந்தன. 2023ல் ஊர் முழுவதும் 5 அடி தண்ணீர் வந்தன. உப்பள ஓடை யொட்டி 7 அடி தண்ணீர் வந்தன தண்ணீர் முழுவதும் அப்புறப்படுத்தினோம் இதற்கு மக்கள் தான் சாட்சி. 2024 ல் தண்ணீர் தேங்கதாத அளவிற்கு சாிசெய்தோம். 2025ல் அந்த பிரச்சனை இருக்காது, கோக்கூர் குளத்திலிருந்து பைபாஸ் போட்டு தண்ணீர் வராத அளிவிற்கு சாிசெய்யப்படும். மாநகாில் ஏகப்பட்ட காலிஇடம் உள்ளது குறிப்பாக 16 17 18 வார்டுகளில் 30 சதவீதம் காலி மணை உள்ளது. 

அதில் மணல்களை நிரப்பினால் தான் மழைநீர் தேங்காது என்று முறையாக சம்பந்தபட்டவர்களுக்கு தகவல் தொிவித்துள்ளோம் அதில் பலர் தானாக முன்வந்து மணல் நிரப்பியுள்ளனா். அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் பாராட்டு தொிவித்துள்ளோம். சிலர் வௌியூாில் இருப்பதால் முழுமையடையாமல் இருக்கிறது அதையும் சாி செய்து விடுவோம். எந்த வித தேவையற்ற சம்பவம் நடைபெறாமல் பாதுகாக்கும் வகையில் சில பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துப்பட்டு கண்காணித்து வருகிறோம் மாநகராட்சி வளர்ச்சிக்கு எல்லோரும் ஓத்துழைக்க வேண்டும் என்று பேசினாா்.

கூட்டத்தில் துணை ஆணையர் சரவணக்குமாா், உதவி ஆணையர் பாலமுருகன், நகர அமைப்பு திட்ட செயற்பொறியாளர் ரெங்கநாதன், துணைப் பொறியாளர்கள் காந்திமதி, இர்வின் ஜெபராஜ், உதவி பொறியாளர் சரவணன், நகா்நல அலுவலர் அர்விந்த்ேஜாதி, சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டி, கவுன்சிலர்கள் கனகராஜ், கண்ணன், விஜயலட்சுமி, ராமர், பொன்னப்பன், இசக்கிராஜா, பகுதி செயலாளர் சுரேஷ்குமாா், வட்டச் செயலாளர் ரவீந்திரன், வட்டப் பிரதிநிதி துரை, மேயாின் நேர்முக உதவியாளர் ரமேஷ், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜோஸ்பா், ஆணையாின் நேர்முக உதவியாளர் துரைமணி, உள்பட அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

RamanathanMar 12, 2025 - 10:03:27 PM | Posted IP 172.7*****

Pl. Send corporation staff to inspect p & t colony 13th road. All 365 days water stagnation.maximum waste water from housed are released in road. Full mud & slurry

ஓ அப்படியாMar 12, 2025 - 06:47:52 PM | Posted IP 172.7*****

மழை பெய்தால் எல்லா இடத்திலும் தண்ணீர் தேங்கி தான் இருக்கும், வெள்ளம் வரும்போது கோமாவுல இருக்கிறீங்களா??

எவன்Mar 12, 2025 - 06:01:54 PM | Posted IP 172.7*****

பாதாள சாக்கடை , சிமெண்ட் ரோடு எல்லாம் சரியில்லை ஊரெல்லாம் சாக்கடையை உருவாக்குவதே ஸ்மார்ட் சிட்டி மாடல்

MAKKALMar 12, 2025 - 03:55:17 PM | Posted IP 172.7*****

பாதாளசாக்கடை தோண்டி போட்டு ஒழுங்கா மூடாமல் விடுகிறார்கள். கதிர்வேல் நகர் சுற்றுவட்டாரப் பகுதியில் சாலைகள சேறு சகதியுமாய் குண்டு குழியுமாய்; இருப்பதால் அநேகர் விழுந்து விடுகிறார்கள். பாக்கியலெட்சுமி நகர், சிவஜோதிநகர்-மேற்கு சேர்ந்து ஒரே தெருவில் இரண்டு குப்பை வண்டி வரும். பாதி பகுதிக்கு ஒரு குப்பை வண்டி, மீதி பகுதிக்கு இன்னொரு குப்பை வண்டி, இதில் நீங்கள் குப்பை கொட்டக்கூடாது என்கிறார்கள் துப்புரவு பணியாளர்கள். மீதி பகுதிக்கு ஒழுங்காக குப்பை வண்டி வருவதில்லை. இதை எத்தனை முறையோ இந்த வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளேன். ஆனால் இது வரை வாரம் ஒருமுறை மட்டுமே குப்பை வண்டி அனுப்பப்படுகிறது. ஒரு வாரம் வீட்டில் குப்பையை எப்படி சேர்த்து வைக்கு முடியும். இதினால் அநேகர் தெருவில் வீசிவிடுகின்றனர். இது மழைக் காலத்தில் பெரும் தொல்லையாக உள்ளது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory