» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வாகனங்களை சேதப்படுத்தி, வேன் டிரைவருக்கு அரிவாள் வெட்டு: மர்ம கும்பல் வெறிச்செயல்!

செவ்வாய் 11, மார்ச் 2025 7:44:33 PM (IST)

கோவில்பட்டியில் நள்ளிரவில் வாகனங்களை அடித்து நொறுக்கி, வேன் டிரைவரை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரத்தை சேர்ந்தவர் நாராயணன். இவர் சொந்தமாக வேன் வைத்து ஓட்டி வருகிறார். வழக்கமாக இவர் தனது வேனை வீட்டின் அருகே சாலையோரத்தில் நிறுத்தி வைப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று நள்ளிரவும் தனது வேனை அங்கு நிறுத்தி விட்டு நாராயணன் அப்பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு போதையில் ஒரு கும்பல் வந்தது. 

திடீரென அவர்கள் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் மற்றும் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கினர். தொடர்ந்து சில வீட்டின் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். மேலும் அந்த கும்பல் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த நாராயணனின் வேன் கண்ணாடியை அடித்து உடைத்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நாராயணன் அதனை தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்தது கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த நாராயணனை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் யார்? என விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory