» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக் கொடை விழா முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியர் ஆய்வு

வெள்ளி 28, பிப்ரவரி 2025 11:41:31 AM (IST)



மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில் மாசிக்கொடைவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆலோசனை நடத்தினார். 

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில் மாசிக் கொடைவிழாவினை சிறப்பாக நடத்தும் வகையில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான கலந்தாலோசனைக்கூட்டம் மண்டைக்காடு ராஜா மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ஸ்டாலின்முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில் – மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில் 2025-ம் வருட மாசிக்கொடைவிழா வரும் 02.03.2025 முதல் 11.03.2025 வரை நடைபெறவிருப்பதை முன்னிட்டு காவல்துறை, போக்குவரத்துத்துறை, பேரூராட்சி / உதவி இயக்குநர், வருவாய் துறை, மருத்துவத்துறை, நெடுஞ்சாலை துறை, இந்து சமய அறநிலையத்துறை, உதவி ஆணையர் (ஆயம்), தீயணைப்பு துறை, உணவு பாதுகாப்பு துறை உள்ளிட்ட அனைத்து துறையினரும் முழு ஒத்துழைப்புடன் பணிகளை மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் திருவிழா காலத்தில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தல், கடற்கரையில் பக்தர்கள் நீராடும் இடத்தில் போதிய பாதுகாப்பு வழங்குதல், திருவிழா நடைபெறும் நாட்களில் பக்தர்களின் வசதிக்காக தேவையான சிறப்பு பேருந்துகள் இயக்குதல், மண்டைக்காடு அருகே தற்காலிக பேருந்து நிலையம் அமைத்தல், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க போதிய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் மண்டைக்காடு தெரு வீதிகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும். தற்காலிக கழிவறைகள் அமைக்க வேண்டும். புறநோயாளிகளின் சிகிச்சை பிரிவு ஒன்று தற்காலிகமாக அமைத்து மருத்துவ அலுவலர் மற்றும் மருந்தாளுனர் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அவசர மருத்துவ வசதி செய்தளித்திட வேண்டும். கோவில் பகுதியில் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தி வைப்பதுடன் முதலுதவிக்கான மருந்து மற்றும் உபகரணங்களுடன் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் செயல்படுவதுடன் குறைந்தது 3 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்க வேண்டும் என துறை அலுவலர்களுக்கு கேட்டுக்கொள்ளப்பட்டது.

திருவிழா தொடங்கும் முன்பாக பணிகள் முடிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. தீயணைப்புத் துறை சார்பில் பக்தர்களின் பாதுகாப்புக் கருதி தீயணைப்பு ஊர்திகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். கடலில் நீராடும் பக்தர்களின் பாதுகாப்புக்கு தேவையான படகு மற்றும் பயிற்சி பெற்ற நீச்சல் வீரர்கள் பணியமர்த்திட வேண்டும். பொங்கல் வைக்கும் இடத்தை கண்காணிக்க வேண்டும். மின்சாரம் தடையின்றி விநியோகிக்கவும் தடங்கல் ஏற்படின் உடனுக்குடன் சரி செய்ய வேண்டும். என துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்தார்கள்.

முன்பாக மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ஸ்டாலின், முன்னிலையில் பக்தர்கள் பொங்கல் வைக்கும் இடம், கடற்கரை பகுதிகள், தற்காலிக பேருந்துநிலையம், கடைகள் அமைக்கும் பணி, தற்காலிக மருந்துவ வசதிகள், குடிநீர் வசதிகள், கழிப்பறை வசதிகள் உள்ளிட்டவைகளை நேரில் பார்வையிட்டார்கள்.

ஆய்வுக்கூட்டத்தில் பத்மநாபபுரம் உதவி ஆட்சியர் வினய்குமார் மீனா, மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்தியகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுகிதா, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில் குமார், கல்குளம் வட்டாட்சியர் சஜித், துறை அலுவலர்கள், காவல்துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory