» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஏழை, நடுத்தர மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்: விஜய் வசந்த் எம்.பி
சனி 1, பிப்ரவரி 2025 8:29:58 PM (IST)
ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், வேலை வாய்ப்புகள் உருவாக்கவும் இந்த நிதியாண்டின் பட்ஜெட்டில் ஏதும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "இன்று நாட்டில் நிலவி வரும் பெரும் சவால் விலைவாசி உயர்வு மற்றும், வேலை வாய்ப்பின்மை. ஆனால் இவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்த போது நிதியமைச்சர் அவர்கள் எதுவும் குறிப்பிடாதது ஏமாற்றம். விலைவாசி உயர்வை கட்டுபடுத்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள கிடைத்த பொன்னான வாய்ப்பினை இந்த அரசு தவற விட்டுள்ளது. மிக முக்கியமாக ஊரக பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக விளங்கும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை விரிவு படுத்தும் வகையில் அறிவிப்பு எதுவும் இல்லை. தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பள தொகையினை வழங்கவும் அறிவிப்பு எதுவும் இல்லை என்பது வருத்தம் அளிக்கும் ஓன்று.
அது போன்று கல்வி துறையையும் இந்த அரசு முற்றிலும் புறக்கணித்துள்ளது. கல்வியில் முதலீடு செய்து, வரும் தலைமுறை உருவெடுப்பதற்கு பட்ஜெட்டில் ஏதும் இல்லை. காலநிலைமாற்றம், மாசு கட்டுப்பாடு, திடக்கழிவு போன்ற முக்கிய திட்டமிடுதல் எதுவும் இந்த பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை.
குறிப்பாக தமிழகம் இந்த பட்ஜெட்டில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. சில மாநிலங்களுக்கு மட்டும் நிதி மற்றும் திட்டங்களை அளித்து மத்திய அரசு மற்றான் தாய் மனப்பான்மையோடு இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது.
அரசியல் லாபத்திற்காக பீகார், டெல்லி மாநில தேர்தலை மனதில் கொண்டு வகுக்கப்பட்ட பட்ஜெட் ஆகவே இதை நான் பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இருசக்கர வாகனங்கள் மோதல்: பிளஸ்-1 மாணவி உயிரிழப்பு - வாலிபர் மீது வழக்குப்பதிவு!
வியாழன் 2, ஏப்ரல் 2026 8:47:28 AM (IST)

குமரி மாவட்டத்தில் முதல் நாளில் 15 பேர் மனுத் தாக்கல்: பத்மநாபபுரத்தில் மந்தம்!
செவ்வாய் 31, மார்ச் 2026 12:00:24 PM (IST)

பச்சிளம் குழந்தையைக் கொன்று முட்புதரில் வீசிய நர்சிங் மாணவி காதலனுடன் கைது: குமரியில் அதிர்ச்சி!
செவ்வாய் 31, மார்ச் 2026 11:27:31 AM (IST)

குமரியில் பறக்கும் படை சோதனை தீவிரம்: செலவின பார்வையாளர் சரண் ஜோஸ் ஆய்வு
செவ்வாய் 31, மார்ச் 2026 10:57:13 AM (IST)

எடப்பாடி பழனிசாமியின் பிரசார வாகனத்தில் திடீர் சோதனை: நாகர்கோவிலில் பரபரப்பு
திங்கள் 30, மார்ச் 2026 9:18:01 AM (IST)

ஆசாரிப்பள்ளம் பழமையான தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு வழிபாடு!
ஞாயிறு 29, மார்ச் 2026 10:57:23 AM (IST)


தமிழகம்Feb 2, 2025 - 02:52:04 PM | Posted IP 162.1*****