» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கருங்கல் அருகே 12.750 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: 3பேர் கைது
சனி 1, பிப்ரவரி 2025 11:09:18 AM (IST)
கருங்கல் அருகே விற்பனைக்காக வைத்திருந்த 12.750 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்னர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குமரி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.ரா.ஸ்டாலின் உத்தரவின் பேரில் காவல் துறையினர் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்கள் விற்பனையை தடுக்க தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கருங்கல் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, விற்பனைக்காக வைத்திருந்த அரசால் தடை செய்யப்பட்ட 12 கிலோ 750 கிராம் எடை கொண்ட புகையிலைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கோலப்பபிள்ளை மகன் ஐயப்பன்(65), ராஜேஷ் சிரோமணி என்பவரின் மகன் சசிகுமார்(55), ஏசுநேசன் மகன் தங்கராஜ்(60) ஆகியோரிரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் விடுதலை!
வெள்ளி 14, பிப்ரவரி 2025 5:48:59 PM (IST)

நாகர்கோவிலில் பிப்.19ம் தேதி 6வது புத்தகத் திருவிழா தொடக்கம் : ஆட்சியர் அழகுமீனா தகவல்
வியாழன் 13, பிப்ரவரி 2025 3:53:01 PM (IST)

மருத்துவ வசதிகளை மேம்படுத்த கோரி விவாதம்: பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை!
வியாழன் 13, பிப்ரவரி 2025 11:34:34 AM (IST)

10 வயது சிறுமி பலாத்காரம்: சிறுவன் உள்பட 2 பேர் கைது
புதன் 12, பிப்ரவரி 2025 9:03:58 PM (IST)

நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தை திருவிழா தேரோட்டம் கோலாகலம்
புதன் 12, பிப்ரவரி 2025 4:57:36 PM (IST)

செண்பகராமன்புதூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
புதன் 12, பிப்ரவரி 2025 11:29:18 AM (IST)
