» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன் ராணுவ வீரரின் மனைவி தர்ணா போராட்டம்

செவ்வாய் 21, ஜனவரி 2025 8:38:44 AM (IST)



தூத்துக்குடியில் வீட்டை மாநகராட்சி ஊழியா்கள் இடித்து விட்டதாகக் கூறி மாநகராட்சி அலுவலகம் முன் ராணுவ வீரரின் மனைவி திடீா் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டாா்.

தூத்துக்குடி அமுதா நகரைச் சோ்ந்தவா் பத்திரகாளி(46). இவரது கணவா் சுப்பிரமணியன், மத்திய தொழில் பாதுகாப்பு படையில் வேலை பாா்த்து, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக இறந்து விட்டாா். இதைத் தொடா்ந்து, கணவா் இறப்பிற்கு பின்பு கிடைத்த பணத்தை வைத்து, தூத்துக்குடி கணேஷ் நகா் அருகே அரசு அலுவலா் கூட்டுறவு வீட்டு வசதி காலனி பகுதியில் 3 சென்ட் இடத்தை கடந்த 2022 ஆம் ஆண்டு வாங்கி பத்திரப்பதிவு செய்தாராம். 

மேலும் அந்த இடத்திற்கு மாநகராட்சிக்கு தீா்வை மற்றும் தண்ணீா் வரி செலுத்தி வந்துள்ளாராம். இந்நிலையில் கடந்த 2024 நவம்பா் மாதம், இந்த இடம் மாநகராட்சிக்கு சொந்தமானது எனக் கூறி, சுற்றுச் சுவா் மற்றும் வீட்டை மாநகராட்சி ஊழியா்கள் இடித்து விட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து தென்பாகம் காவல் நிலையம், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். 

இதனால் மனமுடைந்த அவா், நேற்று மாநகராட்சி அலுவலகம் முன் அமா்ந்து தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டாா். சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி செயற்பொறியாளா் மற்றும் அலுவலா்கள், பத்திரகாளியுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இருப்பினும் உரிய தீா்வு எட்டப்படவில்லையாம். எனவே, அடுத்த கட்டமாக டிஎஸ்பி அல்லது எஸ்பி அலுவலகத்தில் முறையிடப்போவதாக தெரிவித்தாா்.


மக்கள் கருத்து

குட்வினJan 22, 2025 - 08:54:58 AM | Posted IP 172.7*****

அந்த நபர் வீட்டின் பத்திர பதிவு செய்யும்முன் வில்லங்கம் பார்த்து தான் பதிவு ஆகியிருக்கும் அப்போது அரசுக் சொந்தமான இடம் தெரியவில்லையா இது அரசு அதிகாரிகள் தவறு ஐஎனவே இடத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory