» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மதுரை – தூத்துக்குடி திட்டத்தில் மலிவான அரசியல்: மத்திய அமைச்சருக்கு பயணிகள் சங்கம் கண்டனம்!

சனி 11, ஜனவரி 2025 4:27:00 PM (IST)

மதுரை – தூத்துக்குடி புதிய இருப்புபாதை கடந்த 20 நாட்கள் முன்பு வரை (டிசம்பர் 20-ம் தேதி ) வரை ரத்து செய்யப்படவில்லை. இதில் மத்திய ரயில்வே அமைச்சர் மலிவான அரசியல் செய்வதாக குமரி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் விமர்சித்துள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் வெளியிட்ட அறிக்கையில், "ரயில்வே அமைச்சர் மதுரை – தூத்துக்குடி புதிய இருப்புபாதை திட்டத்தை தமிழ்நாடு அரசு வேண்டாம் என்று கூறி விட்டதாக பத்திரிகை சந்திப்பின் போது கூறியுள்ளார்.  இந்த புதிய இருப்புபாதை  திட்டம்  கடந்த  20  நாட்கள்  முன்பு வரை  (2024 டிசம்பர்  20-ம்  தேதி )  வரை  ரத்து செய்யப்படவில்லை. இவ்வளவு பெரிய பதவியில் இருக்கும் மாண்புக்கும் மரியாதையும் காக்கும்  ரயில்வே அமைச்சர் அழகாக கேவலமான  அரசியல் செய்கிறார் என்று தோன்றுகிறது.

ஆனால் கடந்த 20 நாட்களுக்கு முன்பு ராஜியசபாவிருந்து தேர்வு செய்யப்பட்ட எம்.பி மாண்புமிகு வில்சன் அவர்கள் ரயில்வே துறை சம்பந்தமான கேட்கப்பட்ட கேள்விக்கு, "மதுரை - தூத்துக்குடி (தூத்துக்குடி) அருப்புக்கோட்டை வழியாக (143 கி.மீ.) புதிய பாதை திட்டம் ₹121 கோடி செலவில் அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதுவரை, மிளவிட்டான் - மேலமருதூர் (18 கி.மீ.) பகுதி இயக்கப்பட்டது என்று பதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 20 க்கு பிறகு ஜனவரி 11ம் தேதி வரை உள்ள 20 நாட்களில் தமிழ்நாடு அரசு கடிதம் கொடுக்கப்பட்டது என்று தலைமை செயலகத்தில் விசாரித்து பார்த்தால்தான் தெரியும் என தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory