» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் காவலர்களை நியமிக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை !
வெள்ளி 10, ஜனவரி 2025 5:52:29 PM (IST)

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் காவலர்களை நியமிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையத்தில் நிரந்தரமாக போலீசார் இல்லாததால் அடிக்கடி பல்வேறு அடிதடிகள் நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் இன்று மாலை சுமார் 5.30 மணியளவில் வாலிபர் ஒருவரை 5க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் மத்தியபாகம் காவலர் ஒருவர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையமாக இருந்தபோது புறக்காவல் நிலையத்தில் 5க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் இருந்தனர். தற்போது ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையமாக விரிவாக்கம் செய்யப்பட்ட பின்னர் பல ஆண்டுகளாகியும் போதிய அளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை.
இதனால் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுவதாக பொதுமக்கள், பயணிகள் கூறுகின்றனர். எனவே பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளின் பாதுகாப்பு கருதி புறக்காவல் நிலையத்தில் போதுமான அளவு காவலர்களை நிரந்தரமாக நியமிக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.,க்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கடைக்கோடியில் உள்ள மாற்றுத்திறனாளிக்கும் அரசு சேவைகள்: ஆட்சியர் அழகுமீனா தகவல்
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:18:52 PM (IST)

சிறப்பு கல்வி கடன் முகாமில் ரூ.1.87 கோடி மதிப்பில் கடனுதவி : எம்எல்ஏ தகவல்!
வியாழன் 18, செப்டம்பர் 2025 4:43:29 PM (IST)

ஊருக்குள் நுழைந்த கனரக வாகனங்களுக்கு அபராதம்: போக்குவரத்து போலீசார் அதிரடி!
வியாழன் 18, செப்டம்பர் 2025 3:39:13 PM (IST)

அதிக பாரம் ஏற்றி வந்த 6 கனரக வாகனங்களுக்கு ரூ. 2.1 லட்சம் அபராதம்: போலீசார் நடவடிக்கை!
வியாழன் 18, செப்டம்பர் 2025 10:43:29 AM (IST)

அக்மார்க் தரச்சான்று பெறுவதற்காக பதிவு கட்டணம் ரூ.5000லிருந்து ரூ.500-ஆக குறைப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 4:55:58 PM (IST)

தேசிய ஆயுர்வேத தின விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்!
புதன் 17, செப்டம்பர் 2025 4:21:01 PM (IST)

RajaJan 10, 2025 - 06:01:08 PM | Posted IP 172.7*****