» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
இறச்சகுளம் ரூ.90 இலட்சம் மதிப்பில் சாலை பணிகள் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 9, ஜனவரி 2025 5:31:05 PM (IST)

இறச்சகுளம் பகுதியில் ரூ.90 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் தார்சாலை பணியினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் மாநில நெடுஞ்சாலை துறையின் சார்பில் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டு பணியினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (09.01.2025) ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டிற்குட்பட்ட அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் முதலமைச்சரின் கிராம சாலைகள் திட்டம், விரிவான சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் வாயிலாக பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை அறிவித்தும் அதற்கான நிதி ஒதுக்கீடு மேற்கொண்டு சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.
அதனடிப்படையில் இறச்சகுளம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் விரிவான சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் 2024-2025-ன் கீழ் ரூ.90 இலட்சம் மதிப்பில் இறச்சகுளம் முதல் துவரங்காடு வரை 1.6 கி.மீட்டர் நீளத்திலும், 7 மீட்டர் அகலத்தில் சாலையை விரிவாக்கி, தார்சாலை அமைக்கப்பட்டு வரும் பணியினை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு, இத்தார்சாலையின் தரத்தினை ஆய்வு செய்யப்பட்டு, விளக்கம் கேட்டறியப்பட்டதோடு, சாலை தரமானதாக இருக்கவும், பணியினை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்தார். ஆய்வில், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் அரவிந்த், சாலை ஆய்வாளர் அருள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய பேருந்து சேவை : அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்
ஞாயிறு 6, ஜூலை 2025 10:46:20 AM (IST)

பிரசவித்த பின் குழந்தைகளின் செவித்திறன்களை நன்கு ஆராய வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்
சனி 5, ஜூலை 2025 12:41:12 PM (IST)

திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் மர்ம மரணம் : தாய் புகார் - போலீஸ் விசாரணை!!
சனி 5, ஜூலை 2025 10:48:06 AM (IST)

இரணியல் அரண்மனை பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது : ஆட்சியர் அழகுமீனா தகவல்
வெள்ளி 4, ஜூலை 2025 5:36:19 PM (IST)

கிஷ் தீவில் சிக்கி தவிக்கும் குமரி மீனவர்களை மீட்க வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
வெள்ளி 4, ஜூலை 2025 10:40:08 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 3, ஜூலை 2025 10:16:50 AM (IST)
