» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

இஸ்ரோ புதிய தலைவராக வி நாராயணன் நியமனம்: விஜய் வசந்த் எம்.பி வாழ்த்து

புதன் 8, ஜனவரி 2025 3:51:36 PM (IST)

இஸ்ரோவின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள குமரி மாவட்டத்தை சேர்ந்த வி நாராயணனுக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்

அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், "உலகின் தலைசிறந்த விண்வெளி ஆய்வு நிறுவனங்களில் ஒன்றான இஸ்ரோ இந்திய நாட்டை பெருமைப்படுத்தும் விதத்தில் பல்வேறு சாதனைகள் செய்து வருகிறது. இந்தியா விண்வெளியில் காலடி எடுத்து வைப்பதற்கு காரணமான இந்த ஆராய்ச்சி நிறுவனம் டாக்டர் அப்துல் கலாம் போன்ற பல விஞ்ஞான தலைவர்களை நாட்டுக்கு தந்துள்ளது. 

உலகமே உற்று நோக்கும் நமது விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் புதிய தலைவராக நமது கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வி நாராயணன் தேர்வு செய்யப்பட்டுள்ளது நம் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் செய்தி. அவரது திறமையும் அனுபவமும் நமது விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சாதனைகளின் உச்சிக்கு கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை. 

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் திட்டங்களில் 40 வருட கால அனுபவத்தைக் கொண்டிருக்கும் திரு நாராயணன் அவர்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன். இந்த பதவியில் இருந்து ஓய்வு பெறும் சோம் நாத் அவர்களுக்கும் இந்திய மக்கள் சார்பில் மிகப்பெரிய நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory