» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவிலில் ஜன.10-ல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஆட்சியர் தகவல்
செவ்வாய் 7, ஜனவரி 2025 3:29:10 PM (IST)
நாகர்கோவிலில் வருகிற 10ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என குமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாகர்கோவிலில் 10.01.2025 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இம்முகாமில் கன்னியாகுமரி மாவட்ட தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் நேரடியாக வருகை புரிந்து தங்களுடைய நிறுவனங்களுக்கு தேவையான தகுதியுள்ள நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வித்தகுதியுடையவர்கள் கலந்து கொள்ளலாம்.
இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள 10.01.2025 அன்று காலை 10.00 மணிக்கு கோணம், நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரடியாக வந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், இம்முகாமின் மூலம் தனியார்துறையில் தேர்வு செய்யப்படும் பதிவுதாரர்களது வேலைவாய்ப்பு பதிவு மூப்பு விவரங்கள் ரத்து செய்யப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் "தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம்” Tamil Nadu Private Job Portal” (www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதளத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளுமாறும், கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அக்மார்க் தரச்சான்று பெறுவதற்காக பதிவு கட்டணம் ரூ.5000லிருந்து ரூ.500-ஆக குறைப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 4:55:58 PM (IST)

தேசிய ஆயுர்வேத தின விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்!
புதன் 17, செப்டம்பர் 2025 4:21:01 PM (IST)

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணிமண்டப கட்டுமான பணிகள் : ஆட்சியர் ஆய்வு
புதன் 17, செப்டம்பர் 2025 3:30:36 PM (IST)

குமரியிலிருந்து சென்னைக்கு இரண்டாவது தினசரி இரவு நேர ரயில் இயக்கப்படுமா? குமரி மக்கள் எதிர்பார்ப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 3:25:32 PM (IST)

காதல் மனைவி கோபித்து சென்றதால் விபரீதம் : வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை!!
புதன் 17, செப்டம்பர் 2025 11:47:38 AM (IST)

குமரி மாவட்டத்தில் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.77.27 கோடி கடனுதவி: ஆட்சியர் வழங்கினார்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:17:29 PM (IST)
