» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவில் சிறையில் தூத்துக்குடி கைதியிடம் செல்போன் பறிமுதல் : போலீஸ் விசாரணை
திங்கள் 6, ஜனவரி 2025 8:09:13 AM (IST)
நாகர்கோவிலில் உள்ள சிறையில் தூத்துக்குடி கைதி பயன்படுத்திய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாவட்ட சிறைச்சாலை உள்ளது. இங்கு விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என ஏராளமானோர் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு கண்காணிப்பாளராக சம்பத் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவரது தலைமையில் உதவி சிறை அலுவலர் அருண்குமார் மற்றும் சிறை காவலர்கள் ஆகியோர் மாவட்ட சிறையில் உள்ள புதிய கட்டிடத்தின் 7-ம் எண் கைதி அறையில் சோதனை மேற்கொண்டனர்.
அங்கு தூத்துக்குடி ராஜாமணிபுரம் பெருமாள் தாணுகோவில் தெருவைச் சேர்ந்த முத்துராஜ் (23) என்ற கைதி இருந்தார். அங்கிருந்த டி.வி.யின் பின்புறம் பேட்டரியுடன் கூடிய செல்போன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அந்த செல்போனில் சிம் கார்டு இல்லை. கைதி முத்துராஜ் அந்த செல்போனை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே சிறை காவலர்கள் அந்த செல்போனை கைப்பற்றினர்.
பின்னர் இதுதொடர்பாக சிறை சூப்பிரண்டு சம்பத் நேசமணி நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் கைதி முத்துராஜ் மீது நேசமணிநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கைதி முத்துராஜ் அறையில் இருந்து செல்போன் கைப்பற்றப்பட்ட நிலையில் சிம்கார்டு இல்லாததால் அந்த சிம்கார்டு என்ன ஆனது? என்பது குறித்தும், முத்துராஜ் அந்த செல்போனில் இருந்து சிம்கார்டை பயன்படுத்தி அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பேசினாரா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
செல்போனை மறைத்து வைத்திருந்ததாக கூறப்படும் முத்துராஜ் மீது ஏற்கனவே தூத்துக்குடி, ஆறுமுகநேகரி காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குப் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து சிறை அதிகாரி சம்பத் தலைமையிலான குழுவினர் மற்ற கைதிகள் அறையிலும் செல்போன் ஏதாவது உள்ளதா? என சோதனை நடத்தினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கடைக்கோடியில் உள்ள மாற்றுத்திறனாளிக்கும் அரசு சேவைகள்: ஆட்சியர் அழகுமீனா தகவல்
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:18:52 PM (IST)

சிறப்பு கல்வி கடன் முகாமில் ரூ.1.87 கோடி மதிப்பில் கடனுதவி : எம்எல்ஏ தகவல்!
வியாழன் 18, செப்டம்பர் 2025 4:43:29 PM (IST)

ஊருக்குள் நுழைந்த கனரக வாகனங்களுக்கு அபராதம்: போக்குவரத்து போலீசார் அதிரடி!
வியாழன் 18, செப்டம்பர் 2025 3:39:13 PM (IST)

அதிக பாரம் ஏற்றி வந்த 6 கனரக வாகனங்களுக்கு ரூ. 2.1 லட்சம் அபராதம்: போலீசார் நடவடிக்கை!
வியாழன் 18, செப்டம்பர் 2025 10:43:29 AM (IST)

அக்மார்க் தரச்சான்று பெறுவதற்காக பதிவு கட்டணம் ரூ.5000லிருந்து ரூ.500-ஆக குறைப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 4:55:58 PM (IST)

தேசிய ஆயுர்வேத தின விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்!
புதன் 17, செப்டம்பர் 2025 4:21:01 PM (IST)
