» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

புத்தாண்டு சிறப்பாக அமைய நல்வாழ்த்துக்கள்: விஜய் வசந்த் எம்.பி., அறிக்கை!

செவ்வாய் 31, டிசம்பர் 2024 12:27:06 PM (IST)

உங்கள் வாழ்வில் புதுவசந்தம் நிறைந்து இந்த புது வருடம் உங்களுக்கு பூரிப்பை அளிக்க வேண்டுமென கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு புது வருடமும் நமது வாழ்வில் புது நம்பிக்கையை தருகிறது. கடந்த ஆண்டு நாம் சந்தித்த தடைகள் மற்றும் சோதனைகளை கடந்து புது வருடத்திற்குள் காலடி எடுத்து வைக்கிறோம். 

இந்த வருடம் மிகவும் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். நலம், இன்பம், தனம் நிறைந்த புத்தாண்டாக 2025 அமையட்டும் உங்கள் தனிப்பட்ட வாழ்வில் வெற்றிகள் உங்களை தேடி வரட்டும். உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் நிரம்பி வழியட்டும். சமூகத்தில் சகோதரத்துவம் மலர்ந்து, பகைகள் மறைந்து அமைதி நிலவிட வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory