» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரி - ஹூப்ளி வாராந்திர சிறப்பு ரயிலை தொடர்ந்து இயக்க கோரிக்கை!

சனி 28, டிசம்பர் 2024 4:10:56 PM (IST)

கன்னியாகுமரி - ஹூப்ளி வாராந்திர சிறப்பு ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும் என பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஹூப்ளியை தலைமையிடமாக கொண்ட தென்மேற்கு ரயில்வே மண்டலம் சார்பாக  ஹூப்ளியிலிருந்து பெங்களுர், மதுரை வழியாக  கன்னியாகுமரிக்கு வாராந்திர சிறப்பு ரயில் அறிவித்து இயங்கிவருகின்றது. இந்த ரயில் தென்மாவட்ட பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதில் குறிப்பாக பெங்களுர் செல்லும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ள ரயில் சேவை ஆகும்.  ஹூப்ளியிலிருந்து சென்னை மற்றும் திருவனந்தபுரத்துக்கு வாராந்திர நிரந்தர ரயில்கள் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது. 

ஆனால் கர்நாடகா மாநிலத்தில் இருந்து வடபகுதியிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு மிகக்குறைந்த அளவே நேரடி ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஒருசில மும்பை செல்லும் ரயில்கள் கர்நாடக மாநிலம் வழியாக சென்றாலும் இது போன்ற ரயில்களில் முன்பதிவு இருக்கைகள் மிகவும் குறைவாகவே இருக்கும்.

இந்த 07367 எண் கொண்ட ரயில்    ஹூப்ளியிலிருந்து திங்கள் கிழமை மாலை 4 மணிக்கு புறப்பட்டு தாவங்கரே, அரிசிகரை, பெங்களுர் யஸ்வந்பூர், கிருஷ்ணராஜபுரம், சேலம், நாமக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரிக்கு செவ்வாய்க்கிழமை மதியம் 3:20 மணிக்கு வந்து சேர்கிறது. இவ்வாறு வந்த ரயில் பெட்டிகளை சுத்தம் செய்யப்பட்டு தண்ணீர் நிரப்பி விட்டு மறுமார்க்கமாக 07368 எண் கொண்ட ரயிலாக செவ்வாய் கிழமை கன்னியாகுமரியிலிருந்து மாலை 7:10 மணிக்கு புறப்பட்டு பெங்களூர்க்கு புதன்கிழமை 11:20 மணிக்கு சென்று பின்னர்  ஹூப்ளிக்கு மாலை 7:35 மணிக்கு சென்று சேர்கிறது.

இவ்வாறு இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் எல்லாம் வேறு இடங்களுக்கு இயக்கப்படும் ரயில் பெட்டிகள் காலியாக நிற்கும் நாட்களில் வைத்து தான் இயக்கப்படும். இந்த கன்னியாகுமரி -  ஹூப்ளி சிறப்பு ரயில்  ஹூப்ளி – சென்னை வாராந்திர ரயிலின் பெட்டிகள் காலியாக நிற்கும் நாட்களில் இயக்கப்படுகின்றன காரணத்தால் தான் ஹூப்ளியிலிருந்து நமது விருப்பம் போல் ஞாயிற்றுக்கிழமை இயக்க முடியாமல் திங்கள்  புறப்படும் இயக்கப்படுகின்றது.

கன்னியாகுமரி -  ஹூப்ளி சிறப்பு ரயில் சேவை மொத்தம் நான்கு சேவைகள் மட்டுமே அதாவது கடைசி சேவையாக  ஹூப்ளியிலிந்து ஜனவரி 13ம் தேதி புறப்பட்டு கன்னியாகுமரியிலிருந்து ஜனவரி 14-ம் தேதி இயக்கப்படுகின்றன. அதற்கு அடுத்து இந்த ரயில் சேவை கிடையாது.

தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை ஜனவரி மாதம் 14-ம் தேதி முதல் 17ம- தேதி வரை சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. இது மட்டுமல்லாமல் ஜனவரி 26 இந்திய குடியரசு தினம் வேறு வர இருக்கிறது. இந்த பண்டிகை விடுமுறையை முன்னிட்டு இந்த சிறப்பு ரயில் தொடர்ந்து இயக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுக்கின்றது.

தற்போது  ஹூப்ளி – ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் தொடர்ந்து பல மாதங்களாக இயங்கிவருகின்றது.  இவ்வாறு இயங்குவதை போன்று இந்த கன்னியாகுமரி -  ஹூப்ளி சிறப்பு ரயில் தொடர்ந்து இயக்க பயணிகள் மற்றும் ஆன்மீக பக்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory