» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஒரு நாள் வருமானத்தை கொடிநாள் நிதிக்கு வழங்கிய ஆட்டோ டிரைவர்: ஆட்சியர் பாராட்டு
சனி 7, டிசம்பர் 2024 4:51:26 PM (IST)

நாகர்கோவிலில் கடந்த 6 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி கிடைக்கும் தனது ஒரு நாள் வருமானத்தினை கொடி நாள் கொடையாக வழங்கி வரும் ஆட்டோ டிரைவருக்கு ஆட்சியர் அழகுமீனா பாராட்டு தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (07.12.2024) முன்னாள் படை வீரர் வாரியம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் படைவீரர் கொடி நாள் வசூலினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, துவக்கி வைத்து தெரிவிக்கையில்- ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7ம் நாள் இந்தியா முழுவதும் கொடிநாள் அனுசரிக்கப்படுகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நாளில் இந்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளும் முன்னாள் படை வீரர்களுக்கு ஆற்றிய தொண்டுகளை நினைவு கூர்ந்து நன்றி பாராட்டி வருகிறது.
அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் படைவீரர் கொடிநாள் 2024-ம் ஆண்டுக்கான வசூல் இன்று துவக்கிவைக்கப்பட்டுள்ளது. கொடிநாளில் திரட்டப்படும் நிதியானது போர்க்களத்தில் உயிர்நீத்த படைவீரர்களின் கைம்பெண்கள், ஊனமுற்ற படை வீரர்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரது விதவைகளின் மறுவாழ்விற்காகவும், நலத்திட்டங்களுக்காகவும் பயன்படுத்தப்படுவதால் பொதுமக்கள் அனைவரும் நிதியுதவி வாரி வழங்கும்படிகேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்தார்கள்.
அதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கோட்டார் டி.வி.டி காலனி பகுதியை சார்ந்த ஆட்டோ ஓட்டுநர் எம்.கோபிநாத் கடந்த 6 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி கிடைக்கும் தனது ஒரு நாள் வருமானத்தினை கொடி நாள் கொடையாக வழங்கி வருகிறார்கள். இன்று 7ம் ஆண்டாக தனது ஒரு நாள் வருமானத்தை கொடி நாள் கொடையாக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் வழங்கியதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஆட்டோ ஓட்டுநர் அவர்களின் செயலினை வெகுவாக பாராட்டினார்கள்.
நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் படைவீர் நல துணை இயக்குநர் மேஜர் வா.ஸ்ரீ.ஜெயகுமார் (ஓய்வு), மாவட்ட முப்படை வீரர் வாரியத்தலைவர், அலுவலக பணியாளர்கள், முன்னாள் படை வீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் பேருந்து நிலைய தபால்நிலையம் ஜனவரி 3ம் தேதி மூடல்!
சனி 27, டிசம்பர் 2025 4:11:51 PM (IST)

7-வது மாநில நிதிக்குழு மானிய விவரங்கள் பதிவேற்றம்: நிதிக்குழு தலைவர் மு.அலாவுதீன் ஆய்வு
சனி 27, டிசம்பர் 2025 10:40:07 AM (IST)

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் போக்குவரத்து விதிமீறல்: 156 வாகனங்கள் பறிமுதல்!
வெள்ளி 26, டிசம்பர் 2025 4:28:21 PM (IST)

மணக்குடி கிராமத்தில் சுனாமி நினைவு தினம்: கல்லறை தோட்டத்தில் மீனவர்கள் அஞ்சலி!
வெள்ளி 26, டிசம்பர் 2025 12:14:46 PM (IST)

நாகர்கோவில் புதிய போக்குவரத்து ஆய்வாளர் பேச்சிமுத்து பொறுப்பேற்பு
வியாழன் 25, டிசம்பர் 2025 10:31:06 AM (IST)

கலைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: ஆட்சியர் வழங்கினார்
புதன் 24, டிசம்பர் 2025 12:16:42 PM (IST)



.gif)