» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கஞ்சா, போதை மாத்திரை, போதை ஊசி பதுக்கல் : 3 வாலிபர்கள் கைது!
வியாழன் 28, நவம்பர் 2024 4:45:45 PM (IST)
புதுக்கடையில் கஞ்சா, போதை மாத்திரை, போதை ஊசி உள்ளிட்ட போதைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்த 3 இளைஞா்களை போலீசார் கைது செய்தனா்.
குமரி மாவட்டம், புதுக்கடை சந்திப்பு பகுதியை சோ்ந்த வெங்கடேஷ் மகன் திருநாவுக்கரசு (20). இவரது வீட்டில் போதைப் பொருள்களை பதுக்கி வைத்திருப்பதாக புதுக்கடை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசா அங்கு சென்று சோதனை செய்தபோது கஞ்சா, போதை ஊசி, போதை மாத்திரை உள்ளிட்ட போதைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இது தொடா்பாக திருநாவுக்கரசு, அவரது நண்பா்களான முன்சிறை பகுதியை சோ்ந்த ஜாண்சன் மகன் கிறிஸ்டோபா் (21), நித்திரவிளை பகுதியை சோ்ந்த ராஜசெல்வகுமாா் மகன் ராகுல் (24) ஆகிய 3 போ் மீதும் புதுக்கடை போலீசா வழக்கு பதிந்து, போதைப் பொருள்களை பறிமுதல் செய்து அவா்களை கைது செய்தனா்.