» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கோட்டார் புனித சவேரியார் ஆலய திருவிழா : டிச.1 முதல் 3 வரை மதுக்கடைகளை மூட உத்தரவு

வியாழன் 28, நவம்பர் 2024 4:21:32 PM (IST)

கோட்டார் புனித சவேரியார் ஆலய வருடாந்திர திருவிழாவை முன்னிட்டு டிச.1 முதல் 3 வரை மதுக்கடைகள், பார்களை மூட ஆட்சியர் ஆர்.அழகுமீனா உத்தரவிட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், கோட்டார் புனித சவேரியார் ஆலய வருடாந்திர திருவிழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு 01.12.2024 முதல் 03.12.2024 வரை தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003-ன் பிரிவு 12(2)-ன் கீழ் மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின் படி சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரிக்க புனித சவேரியார் ஆலயம் பகுதியை சுற்றியுள்ள மதுபான கடை எண் 4858, 42A, ரயில்வே ரோடு, கோட்டார் ஜங்சன் மற்றும் மதுபான கடை எண் 4708, 6-194/4, பாறைக்கால் மடை, கோட்டார் ஆகிய கடைகளை 01.12.2024 முதல் 03.12.2024 வரை அடைத்திட மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, உத்தரவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory