» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கொட்டாரம் அரசு பள்ளியில் ஆட்சியர் ஆர்.அழகுமீனா திடீர் ஆய்வு!
வியாழன் 28, நவம்பர் 2024 4:06:17 PM (IST)

கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளியினை குமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீன இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் தெரிவிக்கையில்- கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளியை ஆய்வு மேற்கொண்டு, பள்ளி வளாகம் தூய்மை, பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம், மாணவர்களின் தற்போதைய அடைவு நிலை உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பள்ளி வளாகம் தூய்மை இன்றி மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்ததால், பள்ளி தூய்மையான முறையில் தினமும் பேணப்பட உரிய நடவடிக்கை மேற்கொள்ள தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் 1200 மாணவர்கள் படிக்கும் இப்பள்ளியில் மாணவர்களின் ஒழுக்கம் இன்றியமையாத ஒன்றாகும். எனவே மாணவர்கள் பள்ளியில் ஒழுக்கத்தை கற்றுக் கொள்வதற்காக ஆசிரியர்கள் இணைந்து செயல்பட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டது. பள்ளியின் அடிப்படை தேவையான கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி உடனடியாக பூர்த்தி செய்யப்பட கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆசிரியர் தன்னார்வ குழுக்களை அமைத்து பள்ளியின் முன்னேற்றத்திற்காக குறிப்பாக பள்ளி தூய்மை பேணுவதற்காக, செயல்பட ஆசிரியர்களுக்கு வலியுறுத்தப்பட்டது.
தொடர்ந்து போதை பழக்கத்திற்கு அடிமையான மாணவர்களை நல்வழிப்படுத்திட ஆசிரியர்கள் உறுத்துணையாக செயல்பட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது. அவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆற்றுப்படுத்துதல் வழங்கவும் ஏற்பாடு செய்ய தலைமையாசிரியர்க்கு அறிவுறுத்தப்பட்டது. வருகிற பொதுத்தேர்வில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் 100% தேர்ச்சி பெறச் செய்ய ஆசிரியர்கள் கடினமாக உழைக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. மறுமுறை ஆய்வுக்கு வரும்போது கண்டறியப்பட்ட குறைகள் அனைத்தும் களையப்பட்டு, மாணவர் நலன் சார்ந்த கூறுகளில் முன்னேற்றம் காணப்பட வேண்டும் என தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்தார்கள்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இடாலக்குடி பகுதியில் அமைந்துள்ள சதாவதானி செய்குதம்பி பாவலர் நினைவு மண்டபத்தினை சீரமைத்திட பொதுப்பணித்துறை (கட்டிடம்) மற்றும் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலருக்கு அறிவுறுத்தினார். ஆய்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, பொதுப்பணித்துறை (கட்டிடம்) செயற்பொறியாளர் (பொ) முருகேசன், துறை அலுவலர்கள், தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் வேகம் இன்று முதல் அதிகரிப்பு!
வியாழன் 1, ஜனவரி 2026 12:47:20 PM (IST)

கன்னியாகுமரியில் 2025-ம் ஆண்டின் கடைசி சூரிய உதயத்தை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்!
புதன் 31, டிசம்பர் 2025 12:00:25 PM (IST)

டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகைகள் கொள்ளை - போலீஸ் விசாரணை
புதன் 31, டிசம்பர் 2025 11:46:12 AM (IST)

அமைதி, ஆரோக்கியம், மகிழ்ச்சி கொண்டு வரட்டும் : விஜய் வசந்த் எம்.பி புத்தாண்டு வாழ்த்து!
புதன் 31, டிசம்பர் 2025 11:33:44 AM (IST)

குமரி மாவட்டத்தில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் துவக்கம்!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 5:27:33 PM (IST)

கரும்புச்சாறு இயந்திரத்தில் கை சிக்கி சிறுவன் படுகாயம்
செவ்வாய் 30, டிசம்பர் 2025 4:24:18 PM (IST)



.gif)