» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மழைநீர் வெளியேற்றும் பணிகளை மேயர் ஆய்வு

புதன் 20, நவம்பர் 2024 3:53:32 PM (IST)




தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வெளியேற்றும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். 

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மழை காரணமாக ஆங்காங்கே மழைநீர் தேங்கி உள்ளது. இதனை வெளயேற்றும் பணிகள் மாநகராட்சி சார்பில் நடந்து வருகிறது. இந்நிலையில் வடக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வெளியேற்றும் நடவடிக்கைகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் மதுபாலன், வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், பகுதி செயலாளரும் மண்டல தலைவருமான தொ.நிர்மல்ராஜ், கழக நிர்வாகிகள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து

என்னமாNov 20, 2024 - 05:52:09 PM | Posted IP 172.7*****

ஆங்காங்கே மழைநீர் தேங்கி இருக்கே அதன் காரணம் என்ன? பாதாள சாக்கடை சரியில்லையா ? கால்வாய் சரியில்லையா ? அடைப்பு இருக்கா ? ரோடு சரியில்லையா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory