» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரியில் கண்ணாடி கூண்டு பாலத்தினை சட்டமன்ற பொதுகணக்கு குழு ஆய்வு!

செவ்வாய் 19, நவம்பர் 2024 3:35:15 PM (IST)



கன்னியாகுமரியில் கண்ணாடி கூண்டு பாலத்தினை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுகணக்கு குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழுத்தலைவர் கு.செல்வபெருந்தகை தலைமையில், குழு உறுப்பினர்கள் நேற்றைய தினம் (18.11.2024) கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்தார்கள்.

அதன்தொடர்ச்சியாக இன்று (19.11.2024) தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுகணக்கு குழுத்தலைவர் கு.செல்வபெருந்தகை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.சுந்தரவதனம், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு உறுப்பினர்கள் கோ.ஐயப்பன் (கடலூர்), அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி (போளுர்), எஸ்.சந்திரன் (திருத்தணி), எஸ்.சேகர் (பரமத்தி-வேலூர்), ஜெ.முகம்மது ஷாநவாஸ் (நாகப்பட்டிணம்), கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வ.விஜய் வசந்த், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் செ.ராஜேஷ்குமார் (கிள்ளியூர்), தாரகை கத்பர்ட் (விளவங்கோடு) ஆகியோர் முன்னிலையில் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-
 
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைங்கிணங்க தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை புரிந்து, இன்று மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு பிற்பகலில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட உள்ளது. இரையுமன்துறை கடலோரப்பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு, துறைமுகத்தில் ஐ.ஐ.டி-யுடைய டெக்னாலஜி கிடைக்கவில்லை என்ற புகார் உள்ளது. ஐ.ஐ.டி உதவி கிடைத்த பிறகும் 25 உயிர்பலிகள் ஏற்பட்டுள்ளது. 

இனிவரும் காலங்களில் அனுபவம் வாய்ந்த மீனவர்கள் மற்றும் மீனவ பிரதிநிதிகள் மற்றும் ஐ.ஐ.டி நிறுவனத்தின் உதவியுடன் உயிர்பலி இல்லாத துறைமுகமாக மாற்றப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன். வருடந்தோறும் மணல் திட்டு பாதிப்பு ஏற்படுகிறது. மணல்திட்டுகளை கிட்டஜி மூலமாக அகற்றப்பட்டு வருகிறது. இதற்காக நிரந்தர தீர்வு காண சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு பரிந்துரைக்கும். மீனவர்களுக்கு கொடுக்கப்படும் மண்ணெண்ணெய் மீனவர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாத வகையில் கிடைப்பதை உறுதி செய்யப்படும்.

தொடர்ந்து கன்னியாகுமரியில் அமைந்துள்ள அய்யன் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறையை இணைக்கும் கடல்சார் பாலம் அமைப்பதற்கு ரூ.37 கோடி நிர்வாக அனுமதி தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் வைப்பு நிதி பணியாக தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ளது. இப்பாலப்பணி மேற்கொள்ளுவதற்கான ஒப்பந்தம் VME Precast Products. Chennai நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரரால் வடிவமைக்கப்பட்ட கட்டுமான வடிமைப்பு இந்திய தொழில்நுட்ப கழகம் மெட்ராஸ் ன் கடல்சார் பொறியியல் பிரிவின் ஒப்புதல் ஏப்ரல் 2023 - ல் பெறப்பட்டது.

இப்பணிக்கான கடலோர ஒழுக்குமுறை மண்டல ஆணையத்தின் அனுமதி மே 2023 ல் பெறப்பட்டது. முதலில் திருவள்ளுவர் சிலை பக்கத்தில் அடித்தன கம்பிகள் பொருத்தப்பட்டு திருவள்ளுவர் சிலை பக்கத்திலும் விவேகானந்தர் பாறை நினைவகத்தின் பக்கத்திலும் தூண்கள் கான்கிரீட் போடும் பணி நிறைவடைந்துள்ளது. 

RDSO (ஆராய்ச்சி வடிவமைப்புகள் மற்றும் தரநிலைகள் அமைப்பு) அங்கீகரிக்கப்பட்ட மெட்டல் ஸ்கோப் (இந்தியா) பிரைவேட் லிமிடெட், பாண்டிச்சேரி நிறுவனத்தில் வளைவு உத்திரங்கள், குறுக்கு உத்திரங்கள், நீளவாக்கு உத்திரங்கள் மற்றும் குறுக்கு உத்திரங்கள் ஆகியவற்றின் மாதிரி கட்டமைத்தல் பணிகள் நிறைவு பெற்று, Network Arch முழுமையாக பொருத்தப்பட்டு சரிபார்க்கப்பட்டது. முழுமையாக பொருத்தப்பட்ட எஃகு அலகுகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டு 05.08.2024 அன்று பணியிடத்திற்கு கொண்டு வரப்பட்டது.

தற்பொழுது இரு பக்கங்களிலும் தாங்கு தூண்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்து வளைவு உத்திரங்கள். குறுக்கு உத்திரங்கள். நீளவாக்கு உத்திரங்கள் மற்றும் குறுக்கு உத்திரங்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. உத்திரங்கள் பொருத்தும் பணி நிறைவடைந்த உடன் பாலத்திற்கான நடைபாதை மற்றும் ஒளிரூட்டும் விளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெறும். தற்போது வரை 75 சதவீத பணிகள் முடிவடைந்து உள்ளன. இவ்வாறு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு தலைவர் கு.செல்வபெருந்தகை தெரிவித்தார்.

ஆய்வுகளில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை சார்பு செயலாளர் பால சீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, பத்மநாபபுரம் உதவி ஆட்சியர் வினய்குமார் மீனா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.எஸ்.காளீஸ்வரி, நெடுஞ்சாலைத்துறை கோட்டபொறியாளர் சத்தியமூர்த்தி, மீன்வளத்துறை துணை இயக்குனர் சின்ன குப்பன்,மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், பொதுப்பணித்துறை கட்டடம் மற்றும் பராமரிப்பு உதவி செயற்பொறியாளர் முருகேசன், பூம்புகார் கழக மேலாளர் சந்திரசேகர், தேங்காய் பட்டணம் மீன்பிடி துறைமுகம் செயற்பொறியாளர் செல்வராஜ், கன்னியாகுமரி பேரூராட்சித் தலைவர் குமரி ஸ்டீபன், துணைத்தலைவர் ஜெனஸ் மைக்கேல், நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் நவீன் குமார், வட்டார மருத்துவக் குழு வட்டார குழு உறுப்பினர் பாபு, இரையுன்துறை ஊராட்சிமன்ற துணைத்தலைவர் லைலா, கிள்ளியூர் வட்டாட்சியர் ராஜசேகர், துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory