» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டப்பேரவை பொது கணக்கு குழுவினர் ஆய்வு
செவ்வாய் 19, நவம்பர் 2024 11:26:21 AM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை பொது கணக்கு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் கு. செல்வ பெருந்தகை, மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகு மீனா தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.சுந்தரவதனம், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வ.விஜய் வசந்த், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் செராஜேஷ்குமார், சட்டப்பேரவை சார்புச் செயலாளர் பாலசீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் இன்று (19.11.2024) இறைமன்துறை ஊராட்சிக்குட்பட்ட தேங்காய் பட்டணம் மீன்பிடி துறைமுகத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.