» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் பருவ மழை: நீர்நிலைகள் அருகே செல்லவேண்டாம் என எச்சரிக்கை!

திங்கள் 11, நவம்பர் 2024 12:37:57 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் பருவ மழை தீவிரம் அடடைந்து வருவதால் வெள்ளம் பாதிக்கப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஆட்சியர் ஆர்.அழகுமீனா  தெரிவித்துள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2024-வடகிழக்கு பருவமழையால் நீர்நிலைகள் மிக வேகமாக நிரம்பி வருவதால், பொதுமக்கள் யாரும் நீர்நிலைகளை வேடிக்கை பார்க்கவோ, குளிக்கவோ வேண்டாம் என்றும், குறிப்பாக தங்களது குழந்தைகளை நீர்நிலைகளில் குளிப்பதற்கோ அல்லது வேடிக்கை பார்ப்பதற்கோ அனுப்பக்கூடாது என்றும், வடகிழக்கு பருவமழையால் மிகவும் பாதிப்படையக்கூடிய பகுதிகளில் வாழும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருப்பதற்கு ஏதுவாக அருகிலுள்ள பள்ளிகள் மற்றும் பேரிடர் மேலாண்மை கட்டிடங்கள் பேன்றவை தங்கும் முகாம்களாக மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே மக்கள் தங்கள் பகுதிகளில் பருவ மழையால் பாதிப்பு ஏற்படும் என தெரியும் பட்சத்தில் தங்கள் இருப்பிடங்களுக்கு அருகிலுள்ள தங்கும் முகாம்களில் தங்கிக் கொள்ளலாம் எனவும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

மேலும் வானிலை குறித்தான தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில் தமிழக அரசினால் வடிவமைக்கப்பட்டுள்ள செயலியான "தமிழகம் அலர்ட்” (TN-ALERT) என்ற செயலியை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் சேதங்கள் குறித்து கன்னியாகுமரி மாவட்ட பேரிடர் மேலாண்மைத்துறை அவசரக் கட்டுப்பாட்டு அறை 1077 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு 24 மணி நேரமும் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா  கேட்டுக்கொள்கிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory