» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தேசிய சுகாதார திட்டத்தில் பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு!

செவ்வாய் 5, நவம்பர் 2024 5:29:37 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ், தற்போது காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படை காலிப்பணியிடங்களை (Audiologist, Audiometric Assistant, Instructor for the young hearing impaired, FNA, MNA, Radiographer) மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் வழியாக தற்காலிகமாக மாத தொகுப்பூதியத்தில் பணியமர்த்திட விண்ணப்பங்கள் 25.11.2024 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பபடிவம் கன்னியாகுமரி மாவட்ட இணையதளத்தில் https://kanniyakumari.nic.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகம், அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகம், கோட்டார், நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம் -629002 அலுவலகத்தில் அலுவலக நாட்களில் காலை 10 மணிமுதல் மாலை 5.45 மணிக்குள் நேரில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory