» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்ட வனத்துறை காவலர் பணியிடை நீக்கம்!
செவ்வாய் 5, நவம்பர் 2024 4:31:21 PM (IST)
கன்னியாகுமரியில் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்ட வனத்துறை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் அருகே உள்ள வடக்கு தாமரைகுளத்தைச் சோ்ந்தவா் மகாராஜா. இவருக்குச் சொந்தமாக குலசேகரம் வனப் பகுதியில் உள்ள 5 ஏக்கா் நிலத்தில் பணிகள் மேற்கொள்ள தடையில்லா சான்று கேட்டு, நாகா்கோவிலில் உள்ள மாவட்ட வனப் பாதுகாவலா் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தாா்.
தடையில்லா சான்றுபெற வேண்டுமானால் அதிகாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று வனத்துறை அலுவலக ஊழியா் பால்ராஜ் (56) கூறினாராம். இதுகுறித்து மகாராஜா பிள்ளை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஹெக்டா் தா்மராஜுடம் புகாா் அளித்தாா்.
அவரது ஆலோசனையின்படி ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரத்தை மகாராஜா வாங்கி, வனத்துறை அலுவலகத்தில் உள்ள பால்ராஜுடம் கொடுத்தாராம். அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் அவரை கைது செய்தனா். தொடா்ந்து, போலீஸாா் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், எஸ்.பால்ராஜ், லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் மற்றும் நாகர்கோவில் வன உயிரின காப்பாளர் ஆணையின் படி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ராஜாNov 7, 2024 - 04:19:17 PM | Posted IP 162.1*****