» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் மினி பஸ்களால் போக்குவரத்து இடையூறு!
திங்கள் 4, நவம்பர் 2024 5:44:09 PM (IST)
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் நுழைவு வாயிலை மறைத்து நிற்கும் மினிபஸ்களால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தூத்துக்குடியில் பழைய பேருந்து நிலையம் என்று அழைக்கப்படும் அண்ணா பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.57 கோடி மதிப்பில் பேருந்து நிலையம புதுப்பிக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து திருச்செந்தூர், நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தினசரி ஆயிரக் கணக்கான பயணிகள் பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த பேருந்து நிலையத்தில் மினிபஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்து நிலையத்தின் நுழைவு வாயிலில் மினிபஸ்கள் பாதி அளவு மறைத்து நிறுத்துவதால் பேருந்துகள் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மக்கள்Nov 8, 2024 - 09:25:40 AM | Posted IP 172.7*****
அதுமட்டுமல்ல ஆட்டோக்களும் அதை விட பெரிய தொல்லை
Social ActivistNov 6, 2024 - 10:39:27 PM | Posted IP 162.1*****
No control for mini bus and auto. They spoil city name...
SenthilNov 6, 2024 - 09:43:16 PM | Posted IP 172.7*****
ஒரு பேருந்து நிலையத்தை மருகட்டமைப்பு என்ற பெயரில் நாசம் செய்து வைத்துள்ளனர். டிப்போ நிலத்தையும் எடுத்து, கூறுகெட்ட வடிவப்பை வைத்து, இட வசதியே இல்லாதவாறு சின்னா பின்ன மாக்கி உள்ளனர். பேருந்து நிலையத்தின் எந்த கழிவரையும் காற்றோட்டம் இன்றி, குறுவிக்கூடு சைசில் கட்டி, நாறி தொலைகிறது. இப்போது பேருந்துகள் நிறுத்த கூட இடமில்லை. இது ஒரு utter failure project.
MarisaraswathyNov 5, 2024 - 09:12:30 AM | Posted IP 162.1*****
Smart City but minibus crowd good news
KarthiNov 4, 2024 - 10:09:13 PM | Posted IP 172.7*****
Mini bus ottravanuku yetho flight ottratha நெனப்பு
NameNov 4, 2024 - 07:51:19 PM | Posted IP 172.7*****
Min ticket 10 rs vanguran atha kekkave oru officerkum thiramai ilai pola anga
samuga aarvalarNov 8, 2024 - 11:33:46 AM | Posted IP 162.1*****