» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சுற்றுலா வாகனங்களில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்ல தடை - ஆட்சியருக்கு கோரிக்கை!

திங்கள் 4, நவம்பர் 2024 3:36:44 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் மோட்டார் வாகன சட்ட விதிகளுக்கு எதிராக இயங்கி வரும் வாகனங்களை பறிமுதல் செய்து வாகன அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்து மக்கள் கட்சி மாவட்ட அமைப்பாளர்  சுடலைமணி என்பவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனு: தூத்துக்குடி பகுதியில் அதிகப்படியான சுற்றுலா வாகனங்கள் சுற்றுலா அனுமதி பெற்று இயங்கி வருகிறது. 

அதில் மோட்டார் வாகன சட்ட விதிகளுக்கு எதிராக MAXI, CAB, VAN வகையை சார்ந்த சுற்றுலா (TOUR PERMIT) அனுமதியை பெற்றுக்கொண்டு சட்ட விரோதமாக பள்ளி குழந்தைகளை அதிகமாக ஏற்றியும், பள்ளி அனுமதி வாகனத்திற்கு முறையாக அனுமதி பெறாமலும், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களை ஏற்றியும் பணியாளர் வாகனத்திற்கு முறையாக அனுமதி பெறாமல் பயன்படுத்துகின்றனர். 

அதுபோல MAXI CAB VAN நிறுவனங்களில் தயாரித்து வரும் உருவமைப்பை (COMPANY BODY) மாற்றி தாங்களாகவே கோச் பாடி (COACH BODY) கட்டுகின்றனர். கோச் பாடி கட்டுவதற்கு முறையாக அனுமதி பெறாமலும், வெள்ளை நிற பதிவெண் (OWN BOARD) கொண்ட வாகனங்களை சுற்றுலா செல்வதற்கு வாடகைக்கு விட்டும் பள்ளி குழந்தைகளையும் ஏற்றியும் சட்ட விரோதமாக செயல்படுகின்றனர். அப்படி இயங்குகின்ற வாகனங்களில் (TAX, PERMIT, F.C, INSURANCE, LICENSE) போன்றவை இல்லை.

ஆகவே, மாவட்ட ஆட்சியர் தலையீட்டு, இந்த விசயத்தில் ஒரு குழு அமைத்து முறையாக ஆய்வு செய்து, (TOUR PERMIT) சுற்றுலா அனுமதி பெற்று இயங்கும் MAXI, CAB, VAN மற்றும் OWN BOARD வாகனங்களை முறையாக ஆய்வு செய்தும், மோட்டார் வாகன சட்ட விதிகளுக்கு எதிராக இயங்கி வரும் வாகனங்களை பறிமுதல் செய்து வாகன அனுமதியினை ரத்து செய்யுமாறும். பள்ளி குழந்தைகள், பணியாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் உயிரினை காக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

டேய்Nov 4, 2024 - 04:21:46 PM | Posted IP 172.7*****

ரோடு ரொம்ப மோசம் அதையும் கவனிங்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory