» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்டிரல்-கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்
ஞாயிறு 27, அக்டோபர் 2024 9:24:14 AM (IST)
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் நெல்லை-சென்னை சென்டிரல், சென்னை சென்டிரல்-கன்னியாகுமரி, சென்டிரல் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நெல்லையில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் சிறப்பு ஏ.சி.எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்.06074), மறுநாள் காலை 10 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னை சென்டிரலில் இருந்து நாளை (திங்கட்கிழமை) மாலை 3 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் சிறப்பு ஏ.சி.எக்ஸ்பிரஸ் ரயில் (06073), மறுநாள் காலை 7.15 மணிக்கு நெல்லை சென்றடையும்.
சென்னை சென்டிரலில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11.25 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் அதிவிரைவு சிறப்பு ரயில் (06079), மறுநாள் மதியம் 12.45 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமார்க்கமாக, கன்னியாகுமரியில் இருந்து நாளை (திங்கட்கிழமை) மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் அதிவிரைவு சிறப்பு ரயில் (06080), மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு எழும்பூர் வந்தடையும். இந்த ரயில் எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை கால நீடிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:48:59 PM (IST)

தனியார் மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு!
திங்கள் 30, ஜூன் 2025 4:04:27 PM (IST)

இணையதளம் மூலமாக மட்டுமே சுகாதார சான்றிதழ் வழங்கப்படும் : ஆட்சியர் தகவல்
திங்கள் 30, ஜூன் 2025 12:19:27 PM (IST)

மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர்
ஞாயிறு 29, ஜூன் 2025 11:28:11 AM (IST)

கன்னியாகுமரி கடல் அலையின் சீற்றத்தால் குளிக்க தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
ஞாயிறு 29, ஜூன் 2025 11:09:27 AM (IST)

நாகர்கோவில் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வெள்ளி 27, ஜூன் 2025 4:58:02 PM (IST)
