» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
திருநெல்வேலி - சென்னை வந்தேபாரத் ரயில் கன்னியாகுமரிக்கு நீட்டிக்க கோரிக்கை!
வியாழன் 24, அக்டோபர் 2024 4:47:17 PM (IST)

திருநெல்வேலி - சென்னை வந்தேபாரத் ரயிலை கன்னியாகுமரிக்கு நீட்டிக்க வேண்டும் என்று பிரதமருக்கு பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினரும், குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவருமான எஸ்.ஆர்.ஸ்ரீராம் பிரதமருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது "தற்பொழுது நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 14.50 மணிக்கு சென்னைக்கு வந்தேபாரத் ரயில்விடப்பட்டுள்ளது பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
ஆனால் காலை வேளையில் இதுபோன்று சென்னைக்கு ஒரு வந்தேபாரத் ரயில் விடுவதன் மூலம் நெல்லை, மதுரை, திருச்சி செல்லும் குமரி மாவட்ட பயணிகளுக்கு குறிப்பாக கன்னியாகுமரியிலிருந்து சென்னை செல்லும் சுற்றுலா பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும்
இதனை கருத்திற்கொண்டு தற்பொழுது திருநெல்வேலியிலிருந்து காலை 6 மணிக்கு சென்னைக்கு வந்தேபாரத் ரயில்விடப்பட்டுள்ளது. இதில் ரிசர்வேசன் பயணிகள் மட்டுமே செல்ல முடியும் ஆதலால் இதனை காலை 5 மணிக்கு கன்னியாகுமரி அல்லது நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து விட நடவடிக்கை எடுக்குமாறும்
இந்த ரயில் சென்னைக்கு பிற்பகல் 14.00 மணிக்கே செல்வதால் சென்னையிலிருந்து 14.50க்கு மீண்டும் நாகர்கோவில் புறப்பட்டு இரவு 23.30 மணிக்கு வந்து சேருமாறு இதனை நீட்டிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறோம். இதன் மூலம் குமரி மாவட்ட பயணிகளும், சுற்றுலா பயணிகளும் சென்னைக்கு ஒரே நாளில் சென்னை செல்லவும், அன்றைய இரவே மீண்டும் நாகர்கோவில் திரும்பவும் நல்ல வசதி ஏற்படும் என தமது மனுவில் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி தேர்தல் களம்: 5 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை? விஜய் வருகையால் சவாலா?
செவ்வாய் 17, மார்ச் 2026 11:03:39 AM (IST)

பைக் மீது மோதி ஆற்றுக்குள் பாய்ந்த ஆம்னி பேருந்து: இருவர் உயிரிழப்பு - பயணிகள் மீட்பு!
செவ்வாய் 17, மார்ச் 2026 8:39:43 AM (IST)

காரங்காடு அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை!
திங்கள் 16, மார்ச் 2026 4:32:43 PM (IST)

நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 15, மார்ச் 2026 10:41:22 AM (IST)

பசுமை சாம்பியன் விருது, தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு: ஆட்சியர் அழகுமீனா வழங்கினார்
சனி 14, மார்ச் 2026 5:27:34 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிய ரயில் சேவைகள், மாற்றங்கள்: பயணிகள் கோரிக்கை
வெள்ளி 13, மார்ச் 2026 5:27:51 PM (IST)

