» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
17 வயது நர்சிங் மாணவிக்கு குழந்தை பிறந்தது: மாணவன் மீது போக்சோ வழக்கு
செவ்வாய் 22, அக்டோபர் 2024 8:11:23 PM (IST)
அம்மாண்டிவிளை அருகே 17 வயது நர்சிங் மாணவிக்கு குழந்தை பிறந்த விவகாரத்தில் மாணவன் மீது போக்சோ வழக்கு பாய்ந்துள்ளது.
குமரி மாவட்டம் அம்மாண்டிவிளை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது பெண் தற்போது சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அதே கிராமத்தை சேர்த்த 19 வயது வாலிபரும் சென்னையில் உள்ள மற்றொரு கல்லூரியில் பி.இ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். பள்ளியில் படிக்கும் போதே 2 பேரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
சென்னையில் இருந்து விடுமுறையில் சொந்த ஊருக்கு வரும்போது காதலர்கள் இருவரும் அடிக்கடி ரகசியமாக சந்தித்து பேசி வந்துள்ளனர். மேலும் மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வாலிபர் சென்று ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் விடுமுறை முடிந்து மாணவி சென்னைக்கு சென்றார்.
பின்னர் மாணவி சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பார்த்த உறவினர் அவரது உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை கவனித்து, அவரிடமே கேட்டுள்ளார். பிறகு மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனை கேட்டு உறவினர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தார்.
உடனே பெற்றோர், மகளிடம் தீவிரமாக விசாரித்துள்ளனர். இதனை தொடர்ந்து அவர் நடந்த விவரத்தை தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரும் காதலை ஏற்றுக் கொண்டனர். ஆனால் 2 பேருக்கும் திருமணத்திற்கு ஏற்ற வயது இல்லை என்பதால் திருமண வயதை அடைந்ததும் திருமணம் செய்து வைக்கலாம் என பேசி முடித்துக் கொண்டனர்.
இதற்கிடையே மாணவிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனே சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. மாணவிக்கு திருமணம் ஆகாமல் குழந்தை பிறந்ததை அறிந்த மருத்துவமனை நிர்வாகம் தாம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
இதுகுறித்து தாம்பரம் போலீசார் நடத்திய விசாரணையில், சம்பவம் நடந்தது கன்னியாகுமரி மாவட்டம் அம்மாண்டிவிளையை அடுத்துள்ள கிராமம் என்பது தெரியவந்தது. இதையடுத்து புகார் மீதான விசாரணையை குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றினர். பின்னர் மாணவியை கர்ப்பமாக்கியதாக மாணவர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருவனந்தபுரம் - திருநெல்வேலி நேரடி பயணிகள் ரயில்கள் இயக்க கோரிக்கை
வியாழன் 10, ஜூலை 2025 5:21:07 PM (IST)

குமரி மாவட்டத்தில் 8 நாட்களில் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு!!
புதன் 9, ஜூலை 2025 8:26:11 PM (IST)

விரிகோடு ரயில்வே கேட் வழியாக மேம்பாலம் அமைக்கப்படும்: விஜய் வசந்த் எம்.பி. உறுதி!!
புதன் 9, ஜூலை 2025 8:22:21 PM (IST)

பிளஸ்-2 மாணவி பலாத்காரம்: திருமணமான வாலிபர் மீது போக்சோ வழக்கு
புதன் 9, ஜூலை 2025 8:19:31 PM (IST)

சுற்றுலா திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா அழைப்பு!
புதன் 9, ஜூலை 2025 5:19:37 PM (IST)

கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடப் பணிகள்: அமைச்சர் அடிக்கல் நாட்டினார்!
புதன் 9, ஜூலை 2025 4:08:01 PM (IST)
