» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
திங்கள் 14, அக்டோபர் 2024 4:34:32 PM (IST)

குமரி மாவட்டத்தில் கனமழை எதிரொலியாக பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கன்னியாகுமரி மாவட்ட பேரிடர் மேலாண்மை தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சியர் செயல்முறை ஆணை ந.க.எண்.ஹெச்/2024254/2024-ன் படி பேச்சிப்பாறை அணை வெள்ள அபாய அளவான 43.00 அடியை கடந்து இன்று (14.10.2024) காலை 10.00 மணியளவில் 43.85 அடியை எட்டியுள்ளது. அணை நீர்மட்டம் அதிக மழையினால், நீர் உள்வரத்து காரணமாக இன்று (14.10.2024) மாலை 6.00 மணியளவில் 250 கனஅடி/வினாடி உபரிநீர் பேச்சிப்பாறை அணையிலிருந்து கோதையாற்றில் திறந்துவிடப்பட உள்ளதால் களியல், திற்பரப்பு, மூவாற்றுமுகம், குழித்துறை வழியாக தேங்காய்பட்டணம் கடலில் சென்று சேரும்.
எனவே கோதையாறு, தாமிரபரணி ஆற்றுக்கரையோரமாக வசிக்கும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் இருப்பதோடு, ஆற்றோரப் பகுதியில் குளிப்பதை முற்றிலும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தனது பத்திரிக்கை செய்தியில் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணி: ஆட்சியர் ஆய்வு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:53:00 PM (IST)

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயிலில் நாளை ஹனுமான் ஜெயந்தி விழா
வியாழன் 18, டிசம்பர் 2025 3:42:39 PM (IST)

சட்டவிரோதமாக செயல்பட்ட கல்குவாரியில் எஸ்பி ஆய்வு : மேற்பார்வையாளர் கைது!
வியாழன் 18, டிசம்பர் 2025 12:06:04 PM (IST)

நாகர்கோவிலில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - ஆட்சியர் தகவல்!
வியாழன் 18, டிசம்பர் 2025 10:42:55 AM (IST)

திருவட்டார் வட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
புதன் 17, டிசம்பர் 2025 4:59:03 PM (IST)

மொழிப்போர் தியாகி அ.சிதம்பரநாதன் நினைவு தினம்: சார் ஆட்சியர் மரியாதை செலுத்தினார்
புதன் 17, டிசம்பர் 2025 4:27:00 PM (IST)


.gif)