» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாட்டுக் கோழிக்குஞ்சுகள் வழங்கும் திட்டம் : ஏழை பெண்கள் விண்ணப்பிக்கலாம்!
வெள்ளி 11, அக்டோபர் 2024 12:36:45 PM (IST)
குமரி மாவட்டத்தில்,40 நாட்டுக் கோழிக்குஞ்சுகள் 50% மானியத்தில் பெற ஆதரவற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.
கிராமப்புறங்களில் உள்ள ஏழை பெண்கள் விதவைகள் கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு நான்கு வாரங்கள் உடைய 40 நாட்டுக் கோழிக்குஞ்சுகள் 50% மானியத்தில் வழங்கும் திட்டம் கன்னியாகுமரி மாவட்டத்தில் 900 அலகுகள் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தில் ஒரு பயனாளிக்கு நான்கு வாரமுடைய 40 நாட்டுக்கோழிக்குஞ்சுகள் 50% மானியத்தில் ரூ.1600/- செலவில் வழங்கப்படவுள்ளது.
தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கோழி வளர்ப்பு குறித்து ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படும். இத்திட்டத்தில் பயனாளியாக தேர்வு செய்திட பயனாளி ஊரக பகுதியில் உள்ளவராகவும் அந்தந்த கிராமங்களில் நிரந்தரமாக வசிப்பவராகவும் கோழி வளர்ப்பில் ஆர்வமுடையராக இருத்தல் வேண்டும். 30% பயனாளிகள் தாழ்த்தப்பட்ட/ பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். ஏற்கனவே அரசால் வழங்கப்பட்ட இலவச ஆடு/மாடு/கோழிகள் திட்டத்தில் பயனடைந்தவராக இருத்தல் கூடாது.
மேற்கண்ட தகுதிவாய்ந்த விருப்பமுள்ள பயனாளிகள் ஆதார் அட்டை நகலுடன், அருகிலுள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பம் அளித்திடவும் ஏற்கனவே கடந்த மாதம் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் 50% மானியத்தில் கோழிகள் கோரி விருப்பம் விண்ணப்பம் அளித்த பயனாளிகள் விண்ணப்பிக்க வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.அழகுமீனா கேட்டுக்கொள்கிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய பேருந்து சேவை : அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்
ஞாயிறு 6, ஜூலை 2025 10:46:20 AM (IST)

பிரசவித்த பின் குழந்தைகளின் செவித்திறன்களை நன்கு ஆராய வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்
சனி 5, ஜூலை 2025 12:41:12 PM (IST)

திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் மர்ம மரணம் : தாய் புகார் - போலீஸ் விசாரணை!!
சனி 5, ஜூலை 2025 10:48:06 AM (IST)

இரணியல் அரண்மனை பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது : ஆட்சியர் அழகுமீனா தகவல்
வெள்ளி 4, ஜூலை 2025 5:36:19 PM (IST)

கிஷ் தீவில் சிக்கி தவிக்கும் குமரி மீனவர்களை மீட்க வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
வெள்ளி 4, ஜூலை 2025 10:40:08 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 3, ஜூலை 2025 10:16:50 AM (IST)

m.malkiyaOct 11, 2024 - 05:27:54 PM | Posted IP 172.7*****