» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

போலீஸ்காரரின் வீட்டு கதவை உடைத்து நகை திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை!!

வெள்ளி 11, அக்டோபர் 2024 11:28:37 AM (IST)

கருங்கல் அருகே போலீஸ்காரரின் வீட்டு கதவை உடைத்து நகை-பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

குமரி மாவட்டம், கருங்கல் அருகே கம்பிளார் தேவாண்டிவிளையைச் சேர்ந்தவர் மாசிலாமணி. இவருடைய மகன் லாசர். இவர் சென்னையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இதற்காக அவர் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். இந்நிலையில் விடுமுறையில் சொந்த ஊருக்கு குடும்பத்துடன் வந்த லாசர், கடந்த 2-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்னைக்கு சென்றார். 

8-ந்தேதி அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உறவினர் தங்கலீலா என்பவரிடம் லாசரின் வீடு திறந்து கிடப்பதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து தங்கலீலாவின் மகன் ஜிஸ்பா அங்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.

இதுபற்றி லாசருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் கூறியபடி சோதனை செய்ததில், பீரோவில் இருந்த 2¾ பவுன் தங்கநகை மற்றும் வீட்டில் இருந்த செம்பு குட்டுவம், செம்பு குடம், டேபிள்பேன், மிக்ஸி, கிரைண்டர், 7 பட்டுச்சேலைகள் ஆகியவை மாயமாகி இருந்தன. வீட்டில் ஆள் நடமாட்டம் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கதவை உடைத்து நகை மற்றும் பொருட்களை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து லாசரின் உறவினர் ஜிஸ்பா கருங்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை ேதடி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory