» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நவதிருப்பதி கோவில்களில் புரட்டாசி 3வது சனி சிறப்பு வழிபாடு : பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
ஞாயிறு 6, அக்டோபர் 2024 9:39:33 AM (IST)

புரட்டாசி 3-வது சனிக்கிழமையான நேற்று நவதிருப்பதி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி, 108 வைணவ திவ்ய தேசங்களில் முக்கிய தலங்களாகவும், தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் நவதிருப்பதி தலங்களாகவும் விளங்குகின்ற ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவில், நத்தம் விஜயாசன பெருமாள் கோவில், திருப்புளியங்குடி காய்சினிவேந்த பெருமாள் கோவில்,
இரட்டை திருப்பதி தேவர்பிரான், அரவிந்தலோசனார் பெருமாள் கோவில், பெருங்குளம் மாயக்கூத்தர் கோவில், தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் கோவில், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவில், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் ஆகியவற்றில் நேற்று அதிகாலை முதலே திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
பெண்கள் நெய்விளக்கு ஏற்றி வழிபட்டனர். பள்ளிகளில் காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஏராளமானவர்கள் குடும்பத்துடன் கோவில்களுக்கு சென்று வழிபட்டனர். இதனால் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நவதிருப்பதி கோவில்களில் சுவாமிகள் ஊர்வலத்துக்கு பயன்படுத்தும் திருக்குடைகளை வழங்கும் நிகழ்ச்சி, ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவில் வளாகத்தில் நேற்று அதிகாலையில் நடந்தது.
இதில் ஆழ்வார்திருநகரி எம்பெருமானார் ஜீயர் கலந்து கொண்டு 2 திருக்குடைகளை வழங்கினார். தொடர்ந்து நடைபயணமாக மற்ற கோவில்களுக்கும் சென்று திருக்குடைகளை வழங்கினார். கடைசி தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலுக்கு சுவாமி நம்மாழ்வாருக்கு உள்பட நான்கு திருக்குடைகள் வழங்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எல்லோருக்கும் எல்லாம் என்ற உயரிய நோக்கில் அரசு செயல்படுகிறது: அமைச்சர் மனோ தங்கராஜ்
செவ்வாய் 8, ஜூலை 2025 4:56:47 PM (IST)

தக்கலை குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
திங்கள் 7, ஜூலை 2025 4:29:34 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய பேருந்து சேவை : அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்
ஞாயிறு 6, ஜூலை 2025 10:46:20 AM (IST)

பிரசவித்த பின் குழந்தைகளின் செவித்திறன்களை நன்கு ஆராய வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்
சனி 5, ஜூலை 2025 12:41:12 PM (IST)

திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் மர்ம மரணம் : தாய் புகார் - போலீஸ் விசாரணை!!
சனி 5, ஜூலை 2025 10:48:06 AM (IST)

இரணியல் அரண்மனை பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது : ஆட்சியர் அழகுமீனா தகவல்
வெள்ளி 4, ஜூலை 2025 5:36:19 PM (IST)
