» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மும்பையில் இருந்து தூத்துக்குடிக்கு தீபாவளி சிறப்பு ரயில்: ராணிஸ்ரீ குமார் எம்பி கோரிக்கை

வியாழன் 3, அக்டோபர் 2024 4:34:05 PM (IST)

மும்பையில் இருந்து தூத்துக்குடிக்கு தென்காசி வழியாக தீபாவளி சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்று ராணிஸ்ரீ குமார் எம்பி கோரிக்கை விடுத்துள்ளார்.

மும்பை வாழ் தென் மாவட்ட தமிழ் மக்களின் தொடர் கோரிக்கையை ஏற்று மும்பையில் இருந்து கொல்லம், தென்காசி, திருநெல்வேலி வழியாக தூத்துக்குடிக்கு சிறப்பு ரயிலை இயக்குமாறு தென்னக ரயில்வே பொது மேலாளருக்கும் மத்திய ரயில்வே பொது மேலாளருக்கும் தென்காசி எம்பி ராணி ஸ்ரீ குமார் கோரிக்கை விடுத்துள்ளார். 

அவர் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது "தென்காசி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியை பூர்வீகமாக கொண்ட தமிழர்கள் தங்கள் குடும்பத்தினரோடு மும்பையில் வசித்து வருகின்றனர்.இவர்கள் பண்டிகை காலங்களில் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு வந்து உறவினர்களோடு கொண்டாடுவது வழக்கம்.மேலும் தொழில் மற்றும் வேலை நிமித்தமாகவும் பலர் தென் மாவட்டங்களில் இருந்து மும்பைக்கு பயணிக்கின்றனர். தென் மாவட்டங்களில் இருந்து மும்பைக்கு செல்லும் ரயில்களிலும் மற்றும் மும்பையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களிலும் முன்பதிவு இருக்கைகள் முழுவதும் காலியாகி காத்திருப்பு பட்டியலில் உள்ளது.

தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இதுவரை மும்பைக்கு செல்ல நேரடி ரயில் சேவைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.மும்பையில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு ரயிலை இயக்கும் பொழுது ரத்தினகிரி, மங்களூர், கொல்லம், புனலூர், தென்காசி, பாவூர்சத்திரம், அம்பை, நெல்லை வழியாக இயக்க வேண்டும். இதன் மூலமாக தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு முதன் முதலில் மும்பைக்கு நேரடி ரயில் சேவை கிடைப்பதுடன் மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களின் முக்கிய நகரங்களுக்குச் செல்லவும் ரயில் சேவை கிடைக்கும்.

சுற்றுலா மேம்பாடு ஒரு மிக முக்கியமான திருத்தலமான சபரிமலை ஐயப்ப சுவாமி திருக்கோவிலானது கேரள மாநிலத்தின் புனலூர் ரயில் நிலையத்தின் அருகாமையில் இருப்பதால் கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் தமிழக மக்களுக்கும் ஐயப்ப சுவாமி திருக்கோவிலுக்குச் சென்று வர மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

மேலும் தென்னிந்தியாவின் காசி எனப்படும் தென்காசி அருள்தரும் காசி விஸ்வநாதர் திருக்கோவிலுக்கும் பாவங்களை போக்கிடும் பாபநாசநாதர் திருக்கோவிலுக்கும் அறுபடை வீடுகளில் மிக முக்கியமான திருத்தலமான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கும் ரயில் சேவையானது கிடைக்கும். எனவே இந்த சிறப்பு ரயிலை பயணிகள் நலன் கருதி உடனடியாக இயக்குமாறு அவர் தன்னுடைய கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து

RumaOct 8, 2024 - 10:37:08 PM | Posted IP 162.1*****

Any other train or link express, Chennai to tuticorin daily.

Kumar chelladuraiNov 10, 1728 - 10:30:00 PM | Posted IP 172.7*****

Thank you very much 👍

MURUGAN madhiprakash NadarOct 5, 2024 - 10:59:01 AM | Posted IP 162.1*****

Welcome

M.k.samyOct 5, 2024 - 10:49:46 AM | Posted IP 162.1*****

No spl train from mumbai to tutucorin

[email protected]Oct 5, 2024 - 07:54:22 AM | Posted IP 172.7*****

Good idea there is no such train in the route can be considered

மாமன்னன்Jun 20, 1728 - 06:30:00 AM | Posted IP 172.7*****

சிறப்பாக செயல்படும் திமுக எம்பிக்கள்

P. கண்ணன்Oct 4, 2024 - 06:09:43 AM | Posted IP 172.7*****

தூத்துக்குடிக்கு நமது MP குரல் கொடுக்காதபோது பக்கத்து மாவட்ட MP மா.வெங்கடேஷன் தூத்துக்குடி மாவட்டத்து மக்களுக்காக பெற்று தந்த தூத்துக்குடி டூ மேட்டுப்பாளையம் ரயிலை நீட்டிப்பு செய்ய பாடுபட்டார் இப்போது தூத்துக்குடி மக்களின் நலன்கருதி அடுத்த மாவட்ட MP யன ராணிஸ்ரீ குமார் மும்பை டூ தூத்துக்குடி ரயிலை பரிந்துரை செய்ய போராடி கொண்டு இருக்கார் அப்ப நமது அக்கா தூத்துக்குடி மக்களுக்கு என்ன செய்து கொண்டு இருக்கார் வாயால வடை சுடுகிறார் போல

Rajendran PonnaihaOct 3, 2024 - 06:20:10 PM | Posted IP 172.7*****

Super...mrs Rani sri kumar avarkaluku thanx...

Rajendran PonnaihaOct 3, 2024 - 06:18:27 PM | Posted IP 172.7*****

அருமை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory