» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
திருவனந்தபுரம் நவராத்திரி விழா: முன்னுதித்த நங்கை அம்மன் புறப்பாடு!
திங்கள் 30, செப்டம்பர் 2024 3:38:33 PM (IST)

திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக சுசீந்திரம் முன்னுதித்தநங்கை அம்மன் புறப்பாடு நடைபெற்றது.
திருவிதாங்கூா் மன்னா் ஆட்சியில் பத்மநாபபுரம் அரண்மனையில் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டுவந்த நவராத்திரி விழா, 1840ஆம் ஆண்டில் சுவாதி திருநாள் மகாராஜா காலத்தில் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது. இதில் பங்கேற்கும் வகையில், கம்பா் பூஜித்ததாக கருதப்படும் பத்மநாபபுரம் தேவாரகட்டு சரஸ்வதி அம்மன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோவில் வேளிமலை முருகன் விக்கிரகங்கள் ஊா்வலமாக திருவனந்தபுரம் கொண்டுசெல்லப்படும்.
அதன்படி, சுசீந்திரம் முன்னுதித்தநங்கை அம்மன் புறப்பாடு இன்று காலை 7.15 தொடங்கியது. குமாரகோவில் வேளிமலை முருகன் விக்கிரக ஊா்வலம் புறப்பட்டு பத்மநாபபுரம் அரண்மனையை வந்தடைந்தது. அங்கு பாரம்பரியமான திருவிதாங்கூா் மன்னரின் உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு புறப்பட்டது.
அப்போது தமிழக, கேரள போலீசார் அணிவகுத்து நின்று துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தினர். பிறகு சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் முன்பு முன்னுதித்த நங்கை அம்மனுக்கு கோவில் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து 4 ரத வீதிகளில் அம்மன் ஊர்வலம் நடந்தது. இதற்காக பக்தர்கள் தங்கள் வீடுகளின் முன்பு திருவிளக்கேற்றி திருக்கண் சாத்தி, அம்மனை மலர் தூவி வழி அனுப்பி வைத்தனர்.
ஊர்வலத்தின் முன்பு கருட வேடமிட்டு நடனமாடி சென்றனர். ஊர்வலத்தின் பின்னால் தமிழக மற்றும் கேரள அரசு சார்பில் தீயணைப்பு வாகனங்களும், ஆம்புலன்ஸ் வாகனங்களும், போலீஸ் வாகனங்களும் அணி வகுத்தபடி சென்றன. அம்மன் ஊர்வலம் ஆசிரமம், கோட்டார், பார்வதிபுரம், சுங்கான்கடை, வில்லுக்குறி வழியாக மாலை 5.45 மணிக்கு பத்மநாபபுரம் நீலகண்ட சாமி கோவிலை சென்றடைந்தது.
முன்னதாக முன்னுதித்த நங்கை அம்மன் புறப்பாடு நிகழ்ச்சியில் மத்திய மந்திரி சுரேஷ்கோபி, முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் அன்பு பிரகாஷ் சிறையில் அடைப்பு!
புதன் 29, அக்டோபர் 2025 9:14:31 PM (IST)

நாகர்கோவிலில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது!
புதன் 29, அக்டோபர் 2025 4:56:43 PM (IST)

மோந்தா புயல் எதிரொலி: நாகர்கோவில் - பெங்களூரு விரைவு ரயில் நாளை ரத்து!
புதன் 29, அக்டோபர் 2025 10:32:31 AM (IST)

ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் நகை பறிப்பு : தூத்துக்குடி பெண்கள் 2பேர் சிக்கினர்!
புதன் 29, அக்டோபர் 2025 8:07:03 AM (IST)

மாத்தூர் தொட்டி பாலத்தில் சீரமைப்பு பணி : கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தகவல்
செவ்வாய் 28, அக்டோபர் 2025 4:38:19 PM (IST)

திருவனந்தபுரம்-நாகர்கோவில் பயணிகள் ரயிலை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும்: விஜய்வசந்த் எம்.பி. கோரிக்கை
செவ்வாய் 28, அக்டோபர் 2025 8:19:18 AM (IST)


.gif)