» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குடிபோதையில் வாகனம் ஓட்டிய 2பேர் மீது வழக்கு: 2 ஆட்டோக்கள் பறிமுதல்!

சனி 28, செப்டம்பர் 2024 5:47:23 PM (IST)



நாகர்கோவிலில் குடிபோதையில் ஆட்டோ ஓட்டிய 2 டிரைவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர். 

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில்   நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல்  கண்காணிப்பாளர் லலித்குமார் மேற்பார்வையில்,  நாகர்கோவில் போக்குவரத்து காவல் துறையினர்  வேப்பமூடு மற்றும் புன்னை நகர் பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது, கணபதிபுரத்தைச் சேர்ந்த கணேஷ்குமார், திக்கணங்கோட்டைச்  சேர்ந்த ஜெயபாலன் ஆகியோர் ஓட்டி வந்த ஆட்டோக்களை சோதனை செய்த போது இருவரும் குடிபோதையில்,  ஆட்டோ இயக்கியது தெரியவந்தது. பின்னர் இருவரையும் ஆசாரி பள்ளம் அரசு  மருத்துவமனையில் பரிசோதனை செய்து குடிபோதை வழக்கு பதிவு செய்யப்பட்டு  இரண்டு ஆட்டோ வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபர்களுக்கு, நீதிமன்றம் மூலமாக தலா ரூ.10000 அபராதம் விதிக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory