» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கோ ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்கம்: ரூ.5 கோடி இலக்கு நிர்ணயம்!

வியாழன் 26, செப்டம்பர் 2024 5:27:27 PM (IST)



குமரி மாவட்டத்தில், தீபாவளியை முன்னிட்டு கோ ஆப்டெக்ஸில் ரூ.5 கோடி விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார். 

கன்னியாகுமரி மாவட்ட கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் அருகிலுள்ள காமராஜர் கட்டிடத்தில் இயங்கி வரும் கோ ஆப் டெக்ஸ் அங்காடியில் நடைபெறும் தீபாவளி தள்ளுபடி விற்பனையினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் முன்னிலையில் இன்று (26.09.2024) குத்துவிளக்கேற்றி, முதல் விற்பனையினை துவக்கி வைத்து தெரிவிக்கையில்:-

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக இன்று விவசாயி ஒருவர் புதுவிதமான சேலைகள் கோ ஆப்டெக்ஸ் விற்பனைக்கு வைக்கபட்டிருந்ததை பார்த்து, சுமார் 85 ஆயிரம் மதிப்பிலான பட்டுபுடவையினை முகமலர்ச்சியுடன் வாங்கி உள்ளார்கள் என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் கன்னியாகுமரி மாவட்டமானது திற்பரப்பு அருவி, திருவள்ளுவர் சிலை, விவேகனாந்தர் பாறை, கன்னியாகுமரி கடற்கரை, பத்மநாபபுரம் கோட்டை உள்ளிட்ட அதிக சுற்றுலா தலங்களை கொண்ட மாவட்டம் என்பதால் பல்வேறு வெளி நாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டிற்குட்பட்ட மாவட்டங்களிலிருந்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் வருகை புரிக்கின்றனர். எனவே சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடங்களில் கோ ஆப்டெக்ஸ் விற்பனை பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காலத்திற்கேற்ற வகையில் புதிய உத்திகளைக்கையாண்டு பல புதிய வடிவமைப்புகளில் கோ-ஆப்டெக்ஸ் சேலைகள் மற்றும் இதர இரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது தமிழ்நாடு அரசு வழங்கும் 30% சிறப்புத்தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது. 

இந்த சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், ஆரணி தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுபுடவைகள் திருப்புவனம் பட்டு சேலைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, லுங்கி, துண்டு இரகங்கள் பருத்தி சட்டைகள் திரைச்சீலைகள், நைட்டீஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி இரகங்கள் ஏராளமாகத் தருவிக்கப்பட்டுள்ளன.

தற்போது தீபாவளி 2024-ம் ஆண்டிற்கு ரூ.5 கோடி விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள், அரசு அலுவலர்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோர் கைத்தறி நெசவாளர்கள் வாழ்வாதாரம் சிறக்க கைத்தறி துணிகளை வாங்கி ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சிதலைவர் ஆர்.அழகுமீனா, தெரிவித்தார்கள்.

நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் திருநெல்வேலி மண்டல மேலாளர் நா.ராஜேஷ் குமார், நாகர்கோவில் விற்பனை நிலைய மேலாளர் பத்மராஜ், நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உறைவிட உதவி மருத்துவர் விஜயலெட்சுமி, மண்டல தலைவர்கள் அகஸ்டீனா கோகிலா வாணி, ஜவஹர், செல்வகுமார், இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் சரவணன், மாமன்ற உறுப்பினர் நவீன் குமார், வழக்கறிஞர்கள் ராதா கிருஷ்ணன், சதாசிவம், கோ-ஆப்டெக்ஸ் அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory