» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்ட காவல்துறை சார்பில் மக்கள் குறை தீர்க்கும் நாள்: எஸ்பி விசாரணை!!

வியாழன் 26, செப்டம்பர் 2024 4:23:52 PM (IST)



குமரி மாவட்ட காவல்துறை சார்பில் மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை எஸ்பி சுந்தரவதனம் தலைமையில் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் இன்று(25.09.2024) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பொதுமக்களின் மனுக்கள் மீது நேரடியாக விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்கள்.

இக்கூட்டத்தில், நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் லலித் குமார், குளச்சல் உட்கோட்ட  உதவி காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கெளதம், தக்கலை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன், கன்னியாகுமாரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷ் குமார், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory