» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஐஆர்இஎல் தொடா்பான கருத்துக் கேட்புக் கூட்டம் ஒத்திவைப்பு : ஆட்சியர் அறிவிப்பு
வியாழன் 26, செப்டம்பர் 2024 12:06:54 PM (IST)
பத்மநாபபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் வரும் அக்.1ஆம் தேதி நடைபெற இருந்த மணல் அகழ்விப்பு தொடா்பான கருத்துக் கேட்புக் கூட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "எதிர்வரும் நவராத்திரி திருவிழாவினை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சாமி சிலைகள் திருவனந்தபுரத்திற்கு ஊர்வலமாக செல்லும் நிகழ்ச்சி ஆனது வரும் 01.10.2024 அன்று நடைபெறவுள்ளது.
01.10.2024 அன்று காலை 8.00 மணியளவில் கல்குளம் வட்டம், பத்மனாபபுரம் ”ஆ” கிராமம், பத்மனாபபுரம் அரண்மனையில் இருந்து சாமி சிலைகள் ஊர்வலமாக புறப்பட்டு பத்மனாபபுரம், மேட்டுக்கடை, கேரளபுரம், திருவிதாங்கோடு, அழகியமண்டபம், முளகுமூடு வழி குழித்துறை சென்றடைந்து அடுத்த நாள் காலை களியக்காவிளை பகுதியில் மாவட்ட எல்லையினை கடக்க உள்ளது. இந்த ஊர்வலம் ஆரம்பமாகும் பத்மனாபபுரம் பகுதியில் இரு மாநில முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள்.
மேலும் வருடந்தோறும் நடைபெறும் மேற்குறிப்பிட்ட ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள். இந்த ஊர்வலமானது பத்மனாபபுரம் சார் ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள மேட்டுக்கடை பகுதியினை காலை சுமார் 10 - 11 மணிக்குள் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இ
ந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தி/ள். ஐஆர்இஎல் (இந்தியா) லிமிடெட் நிறுவனத்தினால் 1144.0618 ஹெக்டேர் பரப்பளவில் மணல் அகழ்விப்பு மேற்கொள்வதற்காக 01.10.2024 அன்று பத்மனாபபுரம் சார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைத்து காலை 11 மணியளவில் நடைபெறுவதாக இருந்த பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டம் தவிர்க்க முடியாத நிர்வாக காரணத்தினால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது என்பதை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்துள்ளார்.
JegatheeswaranSep 26, 2024 - 06:30:38 PM | Posted IP 162.1*****