» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அண்ணா விரைவு சைக்கிள் போட்டி ஒத்திவைப்பு!
வியாழன் 26, செப்டம்பர் 2024 11:56:22 AM (IST)
குமரியில் செப்.28ல் நடைபெறவிருந்த மாவட்ட அளவிலான அண்ணா விரைவு சைக்கிள் போட்டி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் தமிழ்நாடு முதல்வர் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை சிறப்பிக்கும் வண்ணம் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் மாவட்ட அளவிலான விரைவு சைக்கிள் போட்டிகள் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது.
அதேபோல் இவ்வாண்டும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக 28.09.2024 அன்று காலை 8.00 மணிக்கு புத்தேரி - அப்டா சந்தை அணுகு சாலையில் நடைபெறுவதாக உத்தேசிக்கபட்டிருந்தது.
தலைமை அலுவலகத்தில் 29.09.2024 அன்று முதலமைச்சர் கோப்பைக்கான பரிசளிப்பு விழாவினை நடத்திட அறிவுறுத்தப்பட்டு உள்ளதால் 28.09.2024 அன்று காலை நடைபெறவிருந்த மாவட்ட அளவிலான விரைவு சைக்கிள் போட்டியானது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. மேலும் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் அறிவித்துள்ளது.