» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சுத்தியலால் தாக்கி, கழுத்தை அறுத்து ஆசிரியை கொடூரக்கொலை : கணவர் வெறிச்செயல்!

திங்கள் 23, செப்டம்பர் 2024 8:35:38 AM (IST)

ஆரல்வாய்மொழி அருகே குடும்ப தகராறில் கத்தியால் கழுத்தை அறுத்து மனைவியை கொடூரமாக கொன்ற முன்னாள் ராணுவ அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்தவர் சாம் அலெக்சாண்டர் (82). இவர் பல ஆண்டுகளாக கர்நாடகா மாநிலம் பெங்களுரூவில் தங்கியிருந்து ராணுவத்தில் என்ஜினீயராக பணியாற்றினார். பணியில் இருந்து ஓய்வு பெற்றதும் அங்கேயே குடும்பத்துடன் தங்கியிருந்தார். இவருடைய மனைவி ரோஸ்லின் புளோரா (77). நெல்லை சமாதானபுரத்தை சேர்ந்த இவர் அமெரிக்கா, சவுதி போன்ற நாடுகளில் ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 

இவர்களுக்கு பிரான்சிஸ் சேவியர் (50) என்ற மகனும், ஷிபா (52) என்ற மகளும் உள்ளனர். இருவரும் தற்போது அமெரிக்காவில் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார்கள். மகள் ஷிபாவின் கணவர் ரஞ்சித்சிங் (62) குமரி மாவட்டம் ஆரல்வாய்ெமாழி அருேக உள்ள சீதப்பால் பகுதியை சேர்ந்தவர். இவர்கள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தங்களுடைய சொந்த ஊரான சீதப்பாலில் புதிதாக வீடு கட்டினர். 

இந்த புதுவீட்டுக்கான கிரகப்பிரவேச நிகழ்ச்சியில் பங்கேற்க சாம் அலெக்சாண்டர், மனைவி ரோஸ்லின் புளோரா மற்றும் அமெரிக்காவில் இருந்த ஷிபா, அவரது ரஞ்சித்சிங் ஆகிேயார் சீதப்பால் வந்தனர். இதனை தொடர்ந்து இங்குள்ள வீட்டில் சாம் அலெக்சாண்டர் மனைவியுடன் தங்கியிருந்தார். மகளும், மருமகனும் மீண்டும் அமெரிக்காவுக்கு சென்றனர்.

இதற்கிடையே கடந்த 10 நாட்களுக்கு முன்பு மருமகன் ரஞ்சித்சிங் அமெரிக்காவில் இருந்து சீதப்பாலுக்கு வந்தார். வீட்டில் கீழ் தளத்தில் சாம் அலெக்சாண்டர் மனைவியுடன் தங்கியிருக்க, மாடியில் மருமகன் ரஞ்சித்சிங் வசித்தார். ஏற்கனவே அலெக்சாண்டருக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ேநற்று முன்தினம் இரவு அலெக்சாண்டர் மது குடித்துள்ளார். இதையடுத்து மீண்டும் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு இருவரும் தூங்க சென்று விட்டனர்.

நேற்று காலை 7.30 மணிக்கு மருமகன் ரஞ்சித்சிங் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்து டீ குடிப்பதற்காக மாமியாரை தேடினார். அப்போது அறையில் உள்ள படுக்கையில் மாமியார் ரோஸ்லின் புளோரா கழுத்து அறுக்கப்பட்டு ரத்தவெள்ளத்தில் கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில் கிடந்தார். இதனை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

உடனே மாமனார் சாம் அலெக்சாண்டரை அவர் தேடினார். ஆனால் அவரை காணவில்லை. இதனால் அவர் தான் மாமியாரை கொன்றிருப்பார் என்ற சந்தேகத்தில் ரஞ்சித்சிங் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் அவரை தேடினார். இறுதியில் சீதப்பால் பஸ் நிறுத்தத்தில் சாம் அலெக்சாண்டர் நிற்பதை கண்டனர். பின்னர் அவரை பிடித்து வைத்துவிட்டு ஆரல்வாய்மொழி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். 

நாகர்கோவில் உதவி போலீஸ் சூப்பிரண்டு லலித்குமார், ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் மற்றும் போலீசார் அங்கு சென்றதும் அவர்களிடம் சாம் அலெக்சாண்டரை ஒப்படைத்தனர். இதையடுத்து ரோஸ்லின் புளோரா உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

பிறகு போலீசார் நடத்திய விசாரணையில், மனைவியை கொன்றதை அலெக்சாண்டர் ஒப்பு கொண்டார். அவரை கொன்றது ஏன்? என்பது தொடர்பாக பரபரப்பு தகவலையும் தெரிவித்தார். நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்ட நிலையில் இருவரும் தூங்க சென்றுள்ளனர். பின்னர் அதிகாைல 4 மணிக்கு சாம் அலெக்சாண்டர் திடீரென எழுந்துள்ளார். மனைவி மீது கோபத்தில் இருந்த அவர் சுத்தியல், கத்தியை எடுத்துக் கொண்டார். 

பிறகு தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் தலையில் சுத்தியலால் ஓங்கி அடித்தார். இதில் நிலைகுலைந்த அவர் மயக்க நிலைக்கு சென்றார். அத்துடன் ஆத்திரம் தீராமல் கத்தியை எடுத்துக் கொண்டு தலையில், காது பகுதியில் 2 முறை சரமாரியாக குத்தியதோடு கழுத்தை அறுத்து கொடூரமாக தீர்த்துக் கட்டியுள்ளார்.

போலீஸ் விசாரணையின் போது, மனைவியை கொன்று விட்டோம் என்ற எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாதது போல சாதாரணமானவராக சாம் அலெக்சாண்டர் பதில் அளித்துள்ளார். மேலும் ‘எனது மனைவிக்கு உடல்நலப் பிரச்சினை இருந்தது. எப்போதும் கைவலி, கால்வலி, வயிறுவலி என்று முனுமுனுத்து கொண்டே இருப்பார். இது எனக்கு மன வேதனையை ஏற்படுத்தியது. இதனால் அவரை கொன்றேன்’ என்று வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த பயங்கர கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சாம் அலெக்சாண்டரை கைது செய்தனர். மனைவியை கொடூரமாக கொன்றதாக முன்னாள் ராணுவ அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் குமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory