» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

விவசாயத்திற்காக மயிலாடி கூண்டுப்பாலம் தண்ணீர் திறப்பு : ஆட்சியர் அழகுமீனாதகவல்

வெள்ளி 6, செப்டம்பர் 2024 7:30:27 PM (IST)

பழுதடைந்த மயிலாடி கூண்டுப்பாலம் முதல் மருந்துவாழ்மனை சானல் சீரமைக்கப்பட்டு விவசாயிகளின் பாசன பயன்பாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தனது செய்திக்குறிப்பில் தெரிவிக்கையில்- கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை கால்வாயின் ஒரு கிளையான மருந்துவாழ்மலை சானல், மயிலாடி பகுதியில் அமைந்துள்ள கூண்டு பாலத்தின் மேலாக செல்கிறது. கீழாக பேருந்து வழித்தடம் செல்கிறது. இப்பாலம் புனரமைக்கப்பட்டதில் மேல் வழியாக செல்லும் கால்வாயில் தண்ணீர் கசிவு ஏற்பட்டதால் பாதுகாப்பு கருதி சானலில் தண்ணீர் செல்வது நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் என்னிடம் பழுதடைந்த பகுதியினை சீரமைத்து விவசாயிகளின் பாசன பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள்.

அதனையொட்டி, வேளாண்மைத்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு இது குறித்து அறிவுறுத்தியதன் அடிப்படையில், நெடுஞ்சாலைத்துறை மூலம் மயிலாடி கூண்டுப்பாலத்தின் மேற்பகுதி வழியாகச் செல்லும் தோவாளை சானல்-மருந்துவாழ்மலைச்சானலினை செப்பனிடும் பணி முழுவீச்சில் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

இப்பணிகள் இன்று பிற்பகல் முடிவடைந்ததையொட்டி பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, வேளாண்மைத்துறை அலுவலர்களால் மருந்துவாழ்மலை சானல் விவசாயத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. தற்போது மயிலாடி கூண்டுப்பாலம் வழியாக தண்ணீர் கடைமடைப் பகுதிகளுக்கு சென்று கொண்டிருக்கிறது

எனவே மருந்துவாழ்மனை, ஜேக்கப் பளாக் பகுதிகளைச் சேர்ந்த நெல், வாழை, தென்னை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், விவசாயப் பணிகளை மேற்கொள்ளலாம் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory