» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி மாவட்டத்தில் 5 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது!
புதன் 4, செப்டம்பர் 2024 12:28:33 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் சி.வ.அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை உட்பட 5பேருக்கு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் சிறந்த ஆசிரியரை தேர்வு செய்து ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது’ வழங்கி தமிழக அரசு கவுரப்படுத்தி வருகிறது. அதன்படி பள்ளிக் கல்வித் துறை சார்பில் செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறவுள்ள ஆசிரியர் தின விழாவில் 386 ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது.
இதில், தூத்துக்குடி சி.வ.அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை பெர்சியாள் ஞானமணி, காயாமொழி அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் பாலகிருஷ்ணன், உடன்குடி பண்டாரன்செட்டிவிளை மேரி ஆன் பெஸ்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சரோனின் சுதா, ஆத்தூர் சி.சண்முக நாடார் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பிலிப்ஸ் எமர்ஸன் சஞ்சித்சிங், பணிக்கநாடார் குடியிருப்பு ஸ்ரீகணேசர் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் ராஜகுமார் ஆகியோருக்கு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருது பெறுபவர்களுக்கு ரூ.10,000 ரொக்கம், வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். அதன்படி நடப்பாண்டு மாநில நல்லாசிரியர் விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க பள்ளிக்கல்வித்துறை அழைப்பு விடுத்திருந்தது.
மக்கள் கருத்து
JjjjSep 4, 2024 - 04:32:05 PM | Posted IP 162.1*****
Only money
IndianSep 4, 2024 - 01:26:22 PM | Posted IP 172.7*****
Sivanthakulam School Teacher Beula Mary name seems to be missing.
மேலும் தொடரும் செய்திகள்

பிரசவித்த பின் குழந்தைகளின் செவித்திறன்களை நன்கு ஆராய வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்
சனி 5, ஜூலை 2025 12:41:12 PM (IST)

திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் மர்ம மரணம் : தாய் புகார் - போலீஸ் விசாரணை!!
சனி 5, ஜூலை 2025 10:48:06 AM (IST)

இரணியல் அரண்மனை பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது : ஆட்சியர் அழகுமீனா தகவல்
வெள்ளி 4, ஜூலை 2025 5:36:19 PM (IST)

கிஷ் தீவில் சிக்கி தவிக்கும் குமரி மீனவர்களை மீட்க வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
வெள்ளி 4, ஜூலை 2025 10:40:08 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 3, ஜூலை 2025 10:16:50 AM (IST)

கால்நடைகளுக்கு கால்நோய், வாய்நோய் தடுப்பூசி பணி : ஆட்சியர் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 3:41:45 PM (IST)

நம்பி சுப்பையாSep 6, 2024 - 12:39:17 PM | Posted IP 172.7*****