» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மார்த்தாண்டம் மேம்பாலம் பகுதியில் சாலைகள் சீரமைக்கப்படும்:அமைச்சர் எ.வ.வேலு தகவல்!

புதன் 4, செப்டம்பர் 2024 12:05:00 PM (IST)



மார்த்தாண்டம் மேம்பாலம் மற்றும் அதன் கீழ் அமைந்துள்ள சாலைகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, முன்னிலையில் மார்த்தாண்டம் உயர்மட்ட பாலத்தின் கீழ் பகுதியை இன்று நேரில் பார்வையிட்டு, செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்: 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டிற்குட்பட்ட அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் பல்வேறு திட்டங்களின் வாயிலாக புதிதாக சாலைகள் அமைப்பது, பழுதடைந்த சாலைகளை போர்கால அடிப்படையில் சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருவதோடு, மாநில நெடுஞ்சாலைத் துறையின் கீழ் சாலைகளை உறுதிப்படுத்துவது, விரிவுப்படுத்துவது உள்ளிட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

அதன் ஒருபகுதியாக மார்த்தாண்டம் உயர்மட்ட இரும்பு மேமம்பாலம் தே.நெ.47ல் கி.மீ.604/314-ல் ஆரம்பித்து கி.மீ.606/705 வரை 2.4 கி.மீ நீளத்திற்கு ரூ.320 கோடி மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் 07.05.2024 அன்று பாலத்தின் தூண்கள் 101-ற்கும் 102க்கும் இடையில் உள்ள பாலத்தின் ஓடுதளத்தில் கம்பி தெரியும் அளவிற்கு பழுது ஏற்பட்டது. இதனை சரிசெய்யும் பொருட்டு தலைமைப் பொறியாளர் (நெ) புலனாய்வு மற்றும் வடிவமைப்பு சென்னை 08.05.2024 அன்று உடனடியாக பார்வையிட்டு அவர்களின் அறிவுரைகளின் அடிப்படையில் நுண்நுட்ப கான்கீரிட் மூலம் 10.05.2024 அன்று தார் சாலை போடப்பட்டு அன்றே சாலை போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. 

இது தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையின் சாதனையாகும். மேலும் சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு வரும் சாலையில் 12 கி.மீட்டர் தூரம் வண்டி வாகனங்கள் செல்லுவதற்கு ஏதுவாக சாலையை சீரமைத்து தருமாறு அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் என்னிடம் கோரிக்கை வைத்துள்ளார்கள். அதனை விரைந்து சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் மார்த்தாண்டம் மேம்பாலம் மற்றும் மேம்பாலத்தின் கீழ் அமைந்துள்ள சாலைகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

ஆய்வுகளில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜே.ஜி.பிரின்ஸ் (குளச்சல்), ராஜேஷ்குமார் (கிள்ளியூர்), முனைவர்.தாரகை கத்பர்ட் (விளவங்கோடு), நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு செயலாளர் டாக்டர்.செல்வராஜ், தொழில்நுட்ப சிறப்பு அலுவலர் சந்திரசேகர், கண்காணிப்பு பொறியாளர்கள் ஜெயராணி, சாந்தி, தலைமை பொறியாளர் பன்னீர் செல்வம், நெடுஞ்சாலைத்துறை கோட்ட செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி, குழித்துறை நகர்மன்ற தலைவர் ஆசைதம்பி, துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory