» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் ஆவணி திருவிழா தேரோட்டம்!
செவ்வாய் 3, செப்டம்பர் 2024 8:25:30 AM (IST)

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சிறப்பு பணிவிடை, உச்சிப்படிப்பு, அன்னதானம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவின் 11-வது நாளான நேற்று பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு திரு நடைதிறத்தலும், தொடர்ந்து அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை, காலை 11 மணிக்கு அய்யா வைகுண்டசாமி பச்சை பல்லக்கு வாகனத்தில் வந்து பஞ்சவர்ண தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.
பின்னர் பகல் 12 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேரில் அய்யா வீற்றிருக்க தேரோட்டம் தலைமை குரு பால பிரஜாபதி அடிகளார் தலைமையில் தொடங்கியது. தலைமைப்பதியின் முன்பு இருந்து புறப்பட்ட திருத்தேர் கீழரத வீதி, தெற்கு ரதவீதி, மேல ரத வீதி வழியாக வடக்கு ரத வீதியில் உள்ள தலைமைப்பதியின் வடக்கு வாசல் பகுதிக்கு வந்தது.
திருத்தேர் வடக்கு வாசல் பகுதிக்கு வரும் போது திரளான அய்யாவழி பக்தர்கள் அய்யா வைகுண்டசாமிக்கு பழம், வெற்றிலை, பாக்கு, பன்னீர் உள்ளிட்ட பொருட்களை நீண்ட வரிசையில் நின்று சுருளாக படைத்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட திருத்தேர் மாலை 6 மணிக்கு நிலைக்கு வந்தடைந்தது. தேரோட்ட நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இரவு 7 மணிக்கு அய்யாவின் ரிஷப வாகன ஊர்வலம் நடைபெற்றது. தேரோட்ட நிகழ்ச்சியையொட்டி பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ் வசதியும் செய்யப்பட்டு இருந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆட்சியர் திடீர் ஆய்வு : மாணவ, மாணவியருக்கு அறிவுரை!!
செவ்வாய் 24, ஜூன் 2025 12:10:16 PM (IST)

ஆவினில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு நேரடி நியமனம்: விண்ணப்பங்கள் வரவேற்பு!
செவ்வாய் 24, ஜூன் 2025 12:04:22 PM (IST)

கொசு மருந்து தெளிப்போம்; மலேரியாவை ஒழிப்போம் : சுகாதாரத்துறை வேண்டுகோள்
திங்கள் 23, ஜூன் 2025 5:15:09 PM (IST)

ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு : ஆட்சியர் தகவல்
திங்கள் 23, ஜூன் 2025 12:09:22 PM (IST)

ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 2½ பவுன் செயின் பறிப்பு : மர்ம நபர் கைவரிசை!
திங்கள் 23, ஜூன் 2025 11:25:36 AM (IST)

ஈரான், இஸ்ரேலில் சிக்கியுள்ள குமரி மீனவர்களை மீட்க வேண்டும்: மத்திய அரசுக்கு விஜய் வசந்த் கடிதம்!
ஞாயிறு 22, ஜூன் 2025 12:10:56 PM (IST)
