» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ரூ.27.38 இலட்சம் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 2, செப்டம்பர் 2024 4:12:10 PM (IST)

கன்னியாகுமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 34 பயனாளிகளுக்கு ரூ.27.38 இலட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 415 கோரிக்கை மனுக்கள் இன்று பெறப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
மேலும் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நெடுஞ்சாலைகள் மற்றும் நீர் நிலைகளில் உள்ள குப்பைகளை அந்தந்த பகுதி உள்ளாட்சி அமைப்புகள் தூய்மைப்படுத்த வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 14 பயனாளிகளுக்கு ரூ.25.90 இலட்சம் மதிப்பிலான செயற்கை அவயம், மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட 9 பயனாளிகளுக்கு ரூ.84,150 மதிப்பில் சிறப்பு மடக்கு சக்கர நாற்காலிகளும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 8 பயனாளிகளுக்கு ரூ.43,832 மதிப்பிலான தையல் இயந்திரங்களையும், 3 பயனாளிகளுக்கு ரூ.19,652 மதிப்பிலான தேய்ப்பு பெட்டிகளையும் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சேக் அப்துல் காதர், வருவாய் கோட்டாட்சியர்கள் செல்வி.எஸ்.காளீஸ்வரி (நாகர்கோவில்), செ.தமிழரசி (பத்மநாபபுரம்), ஆயத்தீர்வை உதவி ஆணையர் லொரைட்டா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கனகராஜ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாரதி, அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருவட்டார் வட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
புதன் 17, டிசம்பர் 2025 4:59:03 PM (IST)

மொழிப்போர் தியாகி அ.சிதம்பரநாதன் நினைவு தினம்: சார் ஆட்சியர் மரியாதை செலுத்தினார்
புதன் 17, டிசம்பர் 2025 4:27:00 PM (IST)

ரயில் கால அட்டவணையில் கோரிக்கைகள் நிறைவேறுமா? பயணிகள் எதிர்பார்ப்பு
புதன் 17, டிசம்பர் 2025 3:07:10 PM (IST)

குமரி மாவட்டத்தின் ரயில்வே திட்டங்கள் : மத்திய அமைச்சரிடம் விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை!
புதன் 17, டிசம்பர் 2025 11:33:22 AM (IST)

குமரியில் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி கடல் பாறைகளில் தடுப்பு வேலி அமைப்பு
செவ்வாய் 16, டிசம்பர் 2025 5:03:31 PM (IST)

கல்வியின் அவசியத்தை எடுத்துரைத்த எஸ்.பி. ஸ்டாலினின் நிமிர் குழு.
செவ்வாய் 16, டிசம்பர் 2025 5:00:16 PM (IST)


.gif)